Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலியின் ஒரு இன்ஸ்டா போஸ்ட்டுக்கு எவ்ளோ பணம் தெரியுமா? சொத்து மதிப்பு கேட்டா தலையே சுத்திரும்!

மும்பை: இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஒரேயொரு இன்ஸ்டாகிராம் போஸ்ட், ஒரேயொரு ட்வீட் மூலம் ஈட்டும் வருமானம் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வம் ஆசியக் கோப்பை மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பை உள்ளிட்ட தொடர்கள் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் கிரிக்கெட் மீதான ரசிகர்களின் மோகம் அதிகரித்துக்கொண்டே தான் உள்ளது. இதன் காரணமாக கிரிக்கெட் மீதான வணிகமும், கிரிக்கெட் வீரர்களின் விளம்பர மதிப்பும் பல நூறு கோடிகளை தாண்டி வருகிறது.

Indian Cricketer Virat Kohli is getting Rs.8.9 Crores for a Single Instagram post

கடந்த ஆண்டு ஆசியக் கோப்பையில் ஃபார்முக்கு வந்த விராட் கோலியின் விளம்பர சந்தை மதிப்பு ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. விராட் கோலியின் சொத்து மதிப்பு மொத்தமாக ரூ.1,050 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. பிசிசிஐ ஒப்பந்தம், ஐபிஎல் ஒப்பந்தம் உள்ளிட்டவற்றை கடந்து விராட் கோலியின் ஒரேயொரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு அதிக வருமானம் பெறுகிறார்.

ஒரேயொரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்காக விராட் கோலி ரூ.8.9 கோடி வருமானம் ஈட்டுகிறார். அதேபோல் ஒரேயொரு ட்விட்டர் பதிவிற்காக ரூ.2.5 கோடி வருமானத்தை பெறுகிறார். அதேபோல் மும்பையில் ரூ.34 கோடியில் ஒரு வீடும், குருகிராமில் ரூ.80 கோடியில் ஒரு வீடும் விராட் கோலி கட்டியுள்ளார். அதேபோல் ரூ.31 கோடிக்கு அதிக விலையுயர்ந்த ஏராளமான கார்களை வாங்கி விராட் கோலி குவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் ஸ்டார் ஸ்போர்ட்ஸ், எம்ஆர்எஃப், ஊபர், மிந்த்ரா, வீவோ, அமெரிக்கன் டூரிஸ்டர், நாய்ஸ், சிந்தால், வாலினி உள்ளிட்ட ஏராளமான நிறுவனங்களின் விளம்பர தூதராக செயல்படுவதன் மூலம் விராட் கோலி ஒரு நாளில் மட்டும் ரூ.7.5 கோடி முதல் ரூ.10 கோடி வரை வருமானம் ஈட்டுகிறார். இதனிடையே கால்பந்து கிளப் அணி, டென்னிஸ் அணி, ப்ரோ ரெஸ்லிங் என்று விளையாட்டிலும் விராட் கோலி முதலீடு செய்து வருமானம் ஈட்டுகிறார். விராட் கோலியின் சொத்து மதிப்பு ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Sunday, June 18, 2023, 11:42 [IST]
Other articles published on Jun 18, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+