For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோயிலுக்கு சென்ற இந்திய கிரிக்கெட் அணி.. விதிகளுக்கு உட்பட்டு சட்டையின்றி தரிசனம்.. 2 பேர் மிஸ்ஸிங்

இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது.

இதற்காக இந்திய அணி வீரர்கள் அங்கு முகாமிட்டு பயிற்சி செய்து வந்தனர். இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள பிரபல கோயிலான பத்மநாப சுவாமி கோயிலுக்கு இந்திய அணி வீரர்கள் சென்றனர்.

கடந்த முறை தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டி நடைபெற்ற போது அங்கு தென்னாபிரிக்கா வீரர் கேசவ் மஹராஜ் சென்றார்.

கோயிலுக்கு வழிபாடு

கோயிலுக்கு வழிபாடு

ஆனால் இந்திய வீரர்கள் யாரும் கோயிலுக்கு வராதது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். இந்த நிலையில் இன்று ஒட்டுமொத்த இந்திய அணியும் பத்மநாபசுவாமி கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தினர். கோயில் விதிமுறைகளுக்கு உட்பட்டு மேலாடை இன்றி இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் சாமி தரிசனம் செய்தனர். வீரர்களின் வருகையை கொஞ்சமும் அங்குள்ள பக்தர்கள் எதிர்பார்க்கவில்லை.

புகைப்படம்

புகைப்படம்

இதனால் அங்கு கிரிக்கெட் வீரர்களை சுற்றி ரசிகர்கள் திரண்டனர். எனினும் வீரர்கள் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து கோயிலில் உள்ள புரோகிதர்கள் அனைவரும் கிரிக்கெட் வீரர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மாற்று மதத்தினர் இந்த கோயிலுக்குள் வரக்கூடாது என்ற விதி இருப்பதால் முஹம்மது ஷமி, சிராஜ் ,உம்ரான் மாலிக் போன்ற வீரர்கள் கோயிலுக்கு வரவில்லை.

பயிற்சி முகாம்

பயிற்சி முகாம்

மேலும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற வீரர்களும் கோயிலுக்கு வரவில்லை. புத்தாண்டு தொடக்கத்தில் இந்த கோயிலுக்கு சென்று வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் வழிபாடு நடத்தினர். இதனை தொடர்ந்து மைதானத்திற்கு வந்த வீரர்களில் இஷான் கிஷன், சூரியகுமார் யாதவும் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டார்கள். சுமார் 2 மணி நேரம் இந்த பயிற்சி நடந்தது. இதனால் நாளைய ஆட்டத்தில் பிளேயிங் லெவனில் நிச்சயம் இவ்விரண்டு வீரர்களும் இருப்பார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

டிராவிட் வருகை

டிராவிட் வருகை

எனினும் விராட் கோலியின் ரோகித் சர்மாவும் பயிற்சியில் பங்கேற்காததால் அவர்கள் நாளை விளையாடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதேபோன்று வேகப்பந்துவீச்சாளர்கள் முகமது சமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக் ஆகிய மூன்று வீரர்களும் பயிற்சியில் பங்கேற்கவில்லை. இதனிடையே நேற்று உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பெங்களூர் சென்ற ராகுல் டிராவிட் இன்று வீரர்கள் பயிற்சி முகாமில் பங்கேற்றார்.

Story first published: Saturday, January 14, 2023, 20:05 [IST]
Other articles published on Jan 14, 2023
English summary
Indian cricketers visited Thiruvananthapuram Padmanabaswamy temple
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+