யாருயா நீ.. போட்டியை தொடங்கவிடாமல் சேட்டை செய்த ரசிகர்.. இறுதி காத்திருந்த ட்விஸ்ட்.. சிரிப்பலை!
அகமதாபாத்: ஆஸ்திரேலிய அணியுடனான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய ரசிகர் ஒருவர் செய்த விஷயத்தால் போட்டியை தொடங்க முடியாமல் அம்பயர்கள் கோபத்தில் ஆழ்ந்தனர்.
பார்டர் கவாஸ்கர் கோப்பையின் கடைசி டெஸ்ட்டான இது அகமதாபாத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கடினமான ஸ்கோரை குவித்துள்ளது.
டாப் ஆர்டர் வீரர்கள் சீரான வேகத்தில் விக்கெட்டை பறிகொடுக்க 170 ரன்களுக்கெல்லாம் 4 விக்கெட்களை இழந்துவிட்டது. எனினும் 5 விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த உஸ்மான் கவாஜா - கேமரூன் கிரீன் அட்டகாசமான பார்டர்னர்ஷிப்பை அமைத்தனர்.

இமாலய ஸ்கோர்
ஒருபுறம் உஸ்மான் கவாஜா 180 ரன்கள் மறுபுறம் கேமரூன் கிரீன் 114 ரன்கள் குவிக்க முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 480 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. கடினமான ஸ்கோரை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 2வது நாளின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 36 ரன்களை அடித்து ஆடி வருகிறது.

சுவாரஸ்ய நிகழ்வு
இந்நிலையில் இந்திய இன்னிங்ஸின் போது தான் ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடந்தது. நாதன் லியோன் வீசிய கடைசி ஓவரில் சுப்மன் கில் ஆக்ரோஷமான சிக்ஸரை விளாசினார். அந்த பந்து லாங் ஆன் திசையில் இருந்த மூடு திரையின் மீது பட்டு உள்ளே விழுந்துவிட்டது. பந்தை தேட முடியாது என நினைத்த அம்பயர்கள் அடுத்த பந்தை கொடுக்க தயாராகிவிட்டனர்.

ரசிகரின் செயல்
அந்த சமயத்தில் திரைக்குள் குதித்த இந்திய ரசிகர் ஒருவர் தீவிரமாக பந்தை தேடினார். மறுபுறம் அம்பயர்கள் பந்தை தேர்வு செய்து போட்டியை தொடங்குவதற்கான ஏற்பாட்டை செய்தனர். ஆனால் எதிரே உள்ள அந்த நபர் விலகாமல் போட்டியை தொடங்க முடியாது.

கடுப்பான நடுவர்
இதனால் கோபமடைந்த அம்பயர்கள் வெளியே வா என கத்திக்கொண்டிருந்தனர்.எனினும் விடாப்படியாக தேடிய அந்த நபர் பந்தை கண்டுபிடித்து கொடுத்துவிட்டார். இதனால் சீரியஸாக இருந்த கள வீரர்கள் சிரிப்பலையில் ஆழ்ந்தனர்.


Click it and Unblock the Notifications