Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"இரண்டே" எக்ஸ்பிரஷன்ஸ்.. செம .. வச்சு விளையாடும் மீம் கிரியேட்டர்ஸ்.. யார் அந்த இந்திய ரசிகர்?

மும்பை: உலகக் கோப்பை டி20 குறித்து ரசிகர்கள் சமூக தளங்களில் சூடாக விவாதித்துக் கொண்டிருக்க, இந்திய ரசிகர் ஒருவர் சப்தமின்றி வைரலாகி வருகிறார்.

இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இத்தொடர், அக்டோபர் 17ம் தேதி தொடங்கி நவம்பர் 14ம் தேதி வரை நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

போட்டித்தொடர் எங்கு நடைபெறும் என்பது குறித்த இறுதி முடிவு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என ஐசிசி வட்டாரங்கள் கூறுகின்றன.

 அமீரகத்தில் போட்டிகள்

அமீரகத்தில் போட்டிகள்

கொரோனா காரணமாக இந்தியாவில் டி20 உலகக்கோப்பை நடத்துவதில் சிக்கல் நீடிக்கிறது. எனவே புதிய இடத்தை தேர்ந்தெடுப்பது குறித்து பதிலளிக்க பிசிசிஐ-க்கு ஜூன் 27ம் தேதி வரை கால அவகாசம் கொடுத்துள்ளது ஐசிசி. இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரை வரும் அக்டோபர் 14ம் தேதி தொடங்கவிருப்பதாகவும், அக்டோபர் 14ம் தேதி இறுதிப்போட்டி நடைபெறவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடக்கும் என தெரிகிறது.

 தகுதிச்சுற்று

தகுதிச்சுற்று

இந்த உலகக் கோப்பைப் போட்டியில் மொத்தம் 16 அணிகள் மோதுகின்றன. 2018ம் ஆண்டு தரவரிசையில் டாப் 8 இடங்களில் இருந்த அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதி பெறும். இதில் வங்கதேசம், இலங்கை அணிகள் தரவரிசையில் 9 மற்றும் 10-ம் இடத்தில் இருந்ததால், தகுதிச்சுற்று மூலம் விளையாடி சூப்பர் 12 சுற்றுக்கு வர உள்ளன. நெதர்லாந்து, பப்புவா நியூ கினியா, அயர்லாந்து, நமீபியா, ஸ்காட்லாந்து, ஓமன் ஆகிய 6 நாடுகளும் தகுதிச்சுற்றில் மோதவுள்ளன.

 கோலியா? ரோஹித்தா?

கோலியா? ரோஹித்தா?

இந்த தகுதிச்சுற்று போட்டிகள் முதல் டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்குகிறது. மேல் குறிப்பிடப்பட்ட 8 அணிகளும் குரூப் 1 மற்றும் க்ரூப் 2 என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மோதவுள்ளன. போட்டிகள் ஒருபக்கம் இருந்தாலும், இந்திய அணிக்கு யார் கேப்டன் என்பதில் தான் ரசிகர்களுக்கு இடையே விவாதம் நீடிக்கிறது. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் படுதோல்வி, இந்தியாவில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி, ஐபிஎல் தொடரில், பெங்களூரு அணியின் மோசமான செயல்பாடுகள், விராட் கோலி கேப்டன்ஷிப் மீது அவ்வப்போது சில விமர்சனங்கள் எழுவது வழக்கம். அதற்கு தீனி போடும் வகையில் அமைந்தது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி.

 கோலிக்கும் ஆதரவு

கோலிக்கும் ஆதரவு

இந்நிலையில், டி20 உலகக் கோப்பைக்கு கோலிக்கு பதில் ரோஹித்தை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று ஒருதரப்பு ரசிகர்கள் சமூக தளங்களில் விவாதங்களை எழுப்ப, மறுதரப்பினர் வழக்கம் போல மல்லுக்கட்ட, இன்னும் நான்கு மாதங்கள் கழித்து நடக்கவுள்ள (?) டி20 உலகக் கோப்பைத் தொடருக்கு இப்போதே ரசிகர்கள் சண்டையிட தொடங்கிவிட்டனர்.

 செம எக்ஸ்பிரஷன்ஸ்

செம எக்ஸ்பிரஷன்ஸ்

அதிலும், ஒரு குறிப்பிட்ட மீம் இந்த கேப்டன் விவாதத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதில், இந்திய ரசிகர் ஒருவரின் ஹேப்பி மொமண்ட் மற்றும் ஷாக் மொமன்ட் ஆகியவை இடம் பெற, அதை வைத்து விளையாடி வருகின்றனர் மீம் கிரியேட்டர்கள். குறிப்பாக, உலகக் கோப்பை நடைபெறும் என்ற அறிவிப்புக்கு அந்த ரசிகரின் ஹேப்பி மொமெண்ட்டையும், அணிக்கு விராட் கோலி தான் கேப்டன் என்பதற்கு அவரது ஷாக் மொமெண்ட்டையும் கான்செப்ட்டாக வைத்து மீம் பதிவிடப்பட்டு வருகிறது. அந்த ரசிகர், இங்கிலாந்தின் நடந்த 2019 உலகக் கோப்பைத் தொடரில் நடந்த இந்திய போட்டி ஒன்றில் கொடுத்த வெவ்வேரு எக்ஸ்பிரஷன்ஸ் தான் இப்போது வைரலாகி வருகிறது.

Story first published: Saturday, June 26, 2021, 16:57 [IST]
Other articles published on Jun 26, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+