Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சார்.. அந்த ஸ்ப்ரிங் எங்க இருக்கு? கடுப்பேற்றிய பாண்டிங்.. கலாய்த்து அனுப்பிய இந்திய ரசிகர்கள்!

மும்பை : 2003 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா கோப்பை வென்றது.

இந்திய ரசிகர்கள் மறக்கத் துடிக்கும் அந்த மோசமான போட்டி மார்ச் 23 அன்று தான் நடந்தது.

அந்த போட்டியில் சதம் அடித்து, இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்த அப்போதைய ஆஸ்திரேலிய அணி கேப்டன் ரிக்கி பாண்டிங் சதம் அடித்த அந்த பேட்டை புகைப்படம் எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

சதம் அடித்த பேட்

சதம் அடித்த பேட்

2003 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக ஆடிய போதும் இறுதிப் போட்டியில் படுதோல்வி அடைந்ததால், அதை நினைத்து ரசிகர்கள் இன்றும் ஏமாற்றத்தில் தான் உள்ளனர். அப்படி இருக்கும் போது, சதம் அடித்த பேட்டை காட்டி இந்திய ரசிகர்களை வெறுப்பேற்றி இருக்கிறார் பாண்டிங்.

செம கலாய்

செம கலாய்

எதையும் தாங்கும் இதயம் கொண்ட நம் இந்திய ரசிகர்கள் ரிக்கி பாண்டிங் பேட்டை வைத்து செம கலாய் கலாய்த்து இருக்கிறார்கள். நீங்கள் 90'ஸ் கிட்ஸ் ஆக இருந்தால் ரிக்கி பாண்டிங் ஸ்ப்ரிங் பேட் வைத்து அந்த போட்டியில் ஆடியது (ஆடியதாக பேசிக் கொண்டது) நினைவிருக்கலாம். அதை வைத்து தான் கிண்டல் செய்துள்ளார்கள் நம் 90'ஸ் கிட்ஸ் ரசிகர்கள்.

பாண்டிங் சதம்

பாண்டிங் சதம்

2003 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்து மிகப் பெரிய தவறு செய்தது. அதை சாதகமாக பயன்படுத்திய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாண்டிங் மின்னல் வேக ஆட்டம் ஆடி சதம் அடித்து, ஆஸ்திரேலியா 359 ரன்கள் குவிக்க காரணமாக இருந்தார்.

இந்தியா தோல்வி

இந்தியா தோல்வி

அடுத்து ஆடிய இந்திய அணிக்கு சச்சின் 4 ரன்களில் ஆட்டமிழக்க, அத்துடன் இந்தியா நம்பிக்கை இழந்தது. வெறும் 234 ரன்கள் எடுத்து படுதோல்வி அடைந்தது இந்திய அணி. 1983க்கு பின் உலகக்கோப்பை வெல்லும் வாய்ப்பை அப்போது பறிகொடுத்தது.

அந்த பதிவு

அந்தப் போட்டியில் பயன்படுத்திய பேட்டை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ரிக்கி பாண்டிங் தன் கிரிக்கெட் வாழ்வின் சில நினைவுகளை பகிர்ந்து கொள்வதாகக் கூறி 2003 உலகக்கோப்பை இறுதி நடந்த அதே நாளில் அந்த பேட்டை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

வெந்த புண்ணில்..

வெந்த புண்ணில்..

அது ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு குஷியை ஏற்படுத்தினாலும், இந்திய ரசிகர்களுக்கு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது. மேலும், அவரது ஸ்ப்ரிங் பேட்டை காண ஆவலாக இருந்த இந்திய 90'ச கிட்ஸ் ரசிகர்கள் அதை அந்த புகைப்படத்தில் தேடி உள்ளனர்.

எங்க சார் அந்த ஸ்ப்ரிங்?

சிலர், எங்க சார் அந்த ஸ்ப்ரிங்? என அவரிடமே கேள்வி எழுப்பி உள்ளனர். சிலர் போட்டோஷாப் செய்து பேட்டின் இடையே ஸ்ப்ரிங்கை வைத்துள்ளனர். ஆக, மொத்தத்தில் தங்கள் ஏமாற்றத்தை இப்படி கிண்டல் செய்து மறைத்துக் கொண்டனர் அந்த 90'ஸ் கிட்ஸ்.

சச்சின் ரசிகர் கேட்ட கேள்வி

ஒரு சுத்தமான சச்சின் ரசிகர், "ஐயா உங்கள் பேட்டில் ஸ்ப்ரிங் இருக்கிறது என்கிறார்களே.. அது உண்மையா?" என பாண்டிங் இடமே கேள்வி கேட்டு செம கலாய் கலாய்த்துள்ளார். 90'ஸ் கிட்ஸ்.. நல்லா சிறப்பா பண்ணிட்டீங்கப்பா!

Story first published: Monday, March 23, 2020, 19:59 [IST]
Other articles published on Mar 23, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+