Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பும்ரா காயம் குறித்து டிராவிட் முக்கிய அப்டேட்.. 4 நாட்களில் முக்கிய அறிவிப்பு.. நம்பிக்கை இருக்கு !

கவுகாத்தி : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி நாளை தொடங்கும் நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

Recommended Video

Bumrah நடந்து வர SA seriesல இருந்து மட்டும்தான் இப்போதைக்கு விலகியிருக்காரு - Rahul Dravid

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா காயம் காரணமாக விலகிய நிலையில் அவர் தொடர்பான முக்கிய தகவலை டிராவிட் இன்று வெளியிட்டார்.

பும்ரா குறித்து பேசிய டிராவில் உங்கள் அனைவருக்கும் தெரியும் தென்னாப்பிரிக்கா தொடரிலிருந்து பும்ரா விலகிவிட்டார்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பும்ரா தற்போது பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்றுள்ளார். அங்கு தான் அவர் தொடர்பான அடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். தற்போது வரை தென்னாப்பிரிக்கா தொடரில் மட்டும் தான் அவர் இல்லை. அடுத்த நாட்களில் என்ன நடக்கிறது என்பதை வைத்து தான் முடிவு செய்யப்படும்.

மருத்துவ அறிக்கை

மருத்துவ அறிக்கை

இன்னும் அவர் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. அது வந்தவுடன் தான் நான் உங்களிடம் சொல்ல முடியும். மருத்துவ அறிக்கை குறித்து எல்லாம் நான் பார்க்கவில்லை.நான் நிபுணர்கள் என்ன சொல்கிறார்களோ அதை வைத்து தான் முடிவு எடுக்க முடியும். மருத்துவ குழுவினர் தொடர்ந்து சோதித்து வருகின்றனர்.

நம்பிக்கை இருக்கிறது

நம்பிக்கை இருக்கிறது

எதிர்காலத்தில் என்ன நடக்கிறது என்று அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து தான் தெரியவரும். அவர் டி20 உலக கோப்பை தொடரில் இல்லை என்று இதுவரை எனக்கு அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை. நாங்கள் அனைவரும் நம்பிக்கையுடன் இருக்கின்றோம். சிறந்தது நடக்கும் என்று நான் நம்பிக்கை கொண்டிருக்கிறேன். எஞ்சிய போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது என்று ராகுல் டிராவிட் கூறினார்.

ஆஸி. பயணம் எப்போது?

ஆஸி. பயணம் எப்போது?

பும்ராவுக்கு பதிலாக முகமது சிராஜ் இந்திய அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். தற்போது டி20 உலக கோப்பையில் சிராஜும் உம்ரான் மாலிக்கும் மாற்று வீரர்களாக இந்திய அணியுடன் பயணிப்பார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வரும் 6ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு செல்கிறது. அந்த அணியுடன் பும்ரா செல்ல மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Story first published: Saturday, October 1, 2022, 19:10 [IST]
Other articles published on Oct 1, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+