For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கேஎல் ராகுலால் இந்திய டி20 அணியில் 3 பேருக்கு ஆபத்து.. குட்டி கோலிக்கு பிளேயிங் XI-ல் இடம் இருக்காது

மும்பை : ஆப்கானிஸ்தான் தொடர்பான இந்திய டி20 அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பு இந்திய அணி விளையாட போகும் கடைசி டி20 தொடர் இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் ஐபிஎல் தொடரில் இந்திய அணி வீரர்கள் விளையாட உள்ளதால் உலகக்கோப்பை தொடருக்கு நல்ல பயிற்சிகளமாக ஐபிஎல் போட்டிகள் அமையும் என்று கிரிக்கெட் வல்லுநர்களும் நம்புகின்றனர்.

Indian national cricket team - KL rahul might be danger for 3 cricketers place in t20

இந்த நிலையில் டி20 அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, கே எல் ராகுல் ஆகியோர் கடந்த ஒரு ஆண்டுக்கு மேல் விளையாடாமல் இருக்கிறார்கள். இந்த நிலையில் இவர்கள் 3 பேரும் அணிக்கு திரும்ப அதிக வாய்ப்பு இருக்கிறது.தற்போது கே எல் ராகுல் டி20 அணிக்கு திரும்பினால் பிளேயிங் லெவனில் மூன்று வீரர்களுக்கு ஆபத்து இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கே எல் ராகுல் டி20 போட்டிகளில் தொடக்க வீரராக களமிறங்கக்கூடியவர். மேலும் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் கீப்பர் ஆகவும் கேஎல் ராகுல் தான் இடம் பெற்றிருக்கிறார். இதன் காரணமாக கேஎல் ராகுல் வந்தால் அணியில் இந்த இடத்தில் இறங்கும் வீரர்களுக்கெல்லாம் ஆபத்து இருக்கிறது. குறிப்பாக அடுத்த கோலி என்று அழைக்கப்பட்ட கில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடினார்.

ஆனால் அதே போன்ற ஒரு ஃபார்மை அவரால் டி20 சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து வெளிப்படுத்த முடியவில்லை. அங்கு ஒன்றம் இங்கொன்றும் ஆட்டமாக தான் அவர் அதிரடியாக விளையாடுகிறார். இதன் காரணமாக கில்லின் இடம் ஏற்கனவே கேள்விக்குறியாக இருக்கிறது.ஏற்கனவே கில் இடத்தில் ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் போன்ற வீரர்களை பரிசீலனை செய்ய பிசிசிஐ தொடங்கி விட்டது.

இந்த நிலையில் கே எல் ராகுல் அணிக்கு திரும்பினால் அவரும் ரோகித் சர்மாவும் தான் தொடக்க வீராக களமிறங்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கே எல் ராகுலும் முன்பு போல் இல்லாமல் தற்போது நல்ல ஆட்டத்திறனை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் அவருக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. இதேபோன்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக ஜித்தேஷ் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் இந்திய அணியில் இடம்பெற வாய்ப்பு இருந்தது.

ஆனால் கே எல் ராகுல் என்ற விக்கெட் கீப்பர் இடம்பெற்றால் இவர்களுடைய தேவை இல்லாமல் போய்விடும். இதேபோன்று ராகுலை மூன்றாவது அல்லது நான்காவது வீரராக ரோகித் சர்மா பயன்படுத்தினால், இஷான் கிஷன் இடத்திற்கு ஆபத்து ஏற்பட்டு விடும்.

Story first published: Friday, January 5, 2024, 13:13 [IST]
Other articles published on Jan 5, 2024
English summary
Indian national cricket team - KL rahul might be danger for 3 cricketers place in t20 கேஎல் ராகுலால் இந்திய டி20 அணியில் 3 பேருக்கு ஆபத்து.. குட்டி கோலிக்கு பிளேயிங் XI-ல் இடம் இருக்காது
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+