நான் ஃபார்மில் இல்லையா? யார் சொன்னது? கொஞ்சம் கூட கவலை இல்லை.. அரைசதம் அடித்த பிறகு ராகுல் பேச்சு
அடிலெய்ட் : டி20 உலக கோப்பையில் வங்கதேச அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளி பட்டியலில் இந்திய அணி முதல் இடத்தை பிடித்திருக்கிறது.
கடந்த மூன்று போட்டிகளாக ஒற்றை இலக்கம் ரன்களில் ஆட்டமிழந்த கே.எல் ராகுல் தற்போது வங்கதேசத்துக்கு எதிராக 32 பந்தில் அரைசதம் அளித்துள்ளார்.
இதன் மூலம் தன் மீதான விமர்சனங்களுக்கு கே.எல் ராகுல் தனது பேட் மூலம் பதிலடி கொடுத்தார்.

ரன் சேர்க்க முடியவில்லை
இந்த நிலையில் போட்டி குறித்து பேசிய கே எல் ராகுல் ஆஸ்திரேலியாவுக்கு வருவதற்கு முன் நான் நல்ல ஃபார்மில் இருந்தேன். இந்தியாவில் நடைபெற்ற போட்டிகளில் நான் நல்ல இன்னிங்ஸ் ஆடி ரன்களை சேர்த்திருந்தேன். ஆனால் டி20 உலக கோப்பையில் முதல் மூன்று ஆட்டங்கள் நான் எதிர்பார்த்தது போல் என்னால் ரன் சேர்க்க முடியவில்லை.

எனக்குத் தெரிந்தது
ஆனால் நான் போட்டிக்கு தயாராகும் முறை அனைத்தும் சரிதான் என்று எனக்குத் தோன்றியது.நான் பேட் செய்யும் பந்துகளை நன்றாக பார்க்கிறேன். அதற்கு ஏற்றார் போல் ஷாட்களை ஆடுகிறேன் என்று எனக்குத் தெரிந்தது. ஃபார்மில் இல்லை என்றால் என்னால் பந்தை பார்க்க கூட முடிந்து இருக்காது. இதனால் நான் முதல் மூன்று ஆட்டங்களில் சொதப்பியது குறித்து எந்த கவலையும் படவில்லை.

மகிழ்ச்சி அளிக்கிறது
இதனால் நிச்சயம் நான் ரன் அடிப்பேன் என எதிர்பார்த்தேன்.தற்போது வங்கதேசத்துக்கு எதிராக அரை சதம் அடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கேப்டன் உள்ளிட்ட அணி நிர்வாகிகள் அனைவரும் எனக்கு நல்ல ஆதரவு கொடுத்தனர் என்று கே எல் ராகுல் கூறினார். கே எல் ராகுலின் இந்த அரை சதத்தால் இந்திய அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது.

திருப்புமுனை
மேலும் கே எல் ராகுல் செய்த ரன் அவுட் ஆட்டத்தில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது ரோகித் சர்மா இரண்டு ரன்களில் ஆட்டம் இழந்தும் ராகுல் நிலைத்து நின்றது இந்தியாவுக்கு பெரிய பலமாக பார்க்கப்பட்டது எனினும் ராகுல் முக்கிய ஆட்டங்களில் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து வருகிறார் என்ற குற்றச்சாட்டுக்கு அவர் இன்னும் பதிலடி தரவில்லை.


Click it and Unblock the Notifications