Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சபாஷ்! "முன்மாதிரி" நடராஜன்.. அடுத்து "யார்க்கர்" தான் பாக்கி - "நட்டு" செம ரெகவரி

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் வருங்கால 'யார்க்கர்' கிங் நடராஜன், தனது முதல் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்.

நாடு முழுவதும் வீசும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக, ஐபிஎல் 2021 தொடர், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர் வருண் சக்கரவர்த்திக்கு முதன் முதலாக தொற்று உறுதி செய்யப்பட, அடுத்தடுத்து பல வீரர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் கொரோனா பரவத் தொடங்கியது.

இந்நிலையில், மீண்டும் செப்.18 அல்லது செப்.19ம் தேதி ஐபிஎல் 2021 தொடர் அமீரகத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக, நாளை மறுநாள் (மே.29) நடக்கும் பிசிசிஐ சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தில், ஐபிஎல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது.

 அவதிப்பட்ட நடராஜன்

அவதிப்பட்ட நடராஜன்

இந்நிலையில், ஐபிஎல் 2021 சீசன் நிறுத்தப்படுவதற்கு முன்பே, முழங்கால் காயம் காரணமாக தமிழக வீரர் நடராஜன் சன்ரைசர்ஸ் அணியில் இருந்து விலகியிருந்தார். வெறும் 2 ஆட்டங்களில் மட்டுமே ஆடியிருந்த நடராஜனுக்கு நாளுக்கு நாள் காயத்தின் வீரியம் அதிகரித்தது. நடராஜனுக்கு ஏற்பட்ட முழுங்கால் காயத்திலிருந்து அவர் முழுமையாக குணமாகாமல் தான் இருந்தார்.

 என்சிஏ

என்சிஏ

என்சிஏவில் ஏற்கெனவே சிகிச்சை பெற்றுத் திரும்பிய நடராஜன் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு டி20, ஒருநாள் போட்டியில் விளையாடினார். இருப்பினும் அவர் 100 சதவீதம் தகுதியாக இல்லை. ஐபிஎல் தொடரில் 2 போட்டிகளில் பங்கேற்றவுடன் மீண்டும் முழங்கால் வலி ஏற்பட்டதால், அவர் சிகிச்சைக்காக பெங்ளூரு என்சிஏவுக்கு செல்ல உள்ளார் என்று கூறப்பட்டது.

 முன்பை விட பெட்டர்

முன்பை விட பெட்டர்

இதைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரலில் அவருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இப்போது தொடர் ஓய்வில் இருக்கும் நடராஜன், சமீபத்தில் தனது வீட்டில் இருந்தே பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில், முன்பை விட நான் ஒவ்வொரு நாளும் மிக வலிமையாக எழுகிறேன்' என்று குறிப்பிட்டிருந்தார்.

 கோடானகோடி நன்றி

கோடானகோடி நன்றி

இந்நிலையில், கொரோனா தடுப்பூசிக்கான முதல் டோஸை நடராஜன் செலுத்திக் கொண்டார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில், "இன்று காலை நான் தடுப்பூசி போட்டுக் கொண்டேன். நமது லட்சக்கணக்கான மக்களுக்காக தங்கள் வாழ்க்கையை பணயம் வைத்து சேவை புரியும் சுகாதாரப் பணியாளர்களுக்கு கோடானகோடி நன்றி" என்று ட்வீட் செய்துள்ளார். அதுமட்டுமின்றி, அவரது இந்த செயல்பாடு மூலம், எண்ணற்ற ரசிகர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் வாய்ப்பும் உள்ளது.

 பக்கா தயார்

பக்கா தயார்

இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்து செல்ல உள்ள நிலையில், அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. ஆகையால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என நடராஜன் அனைத்திலும் விளையாட முடியாத சூழல் உள்ளது. எனினும், அவர் ஆகஸ்ட் மாதம் வரை முழுமையாக ஓய்வில் இருக்க முடியும். இதனால், செப்டம்பரில் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடருக்கு நடராஜன் தன்னை பக்காவாக தயார் செய்து கொள்ள முடியும் என்பதில் சந்தேகமில்லை.

Story first published: Thursday, May 27, 2021, 21:21 [IST]
Other articles published on May 27, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+