இந்திய ஸ்கோர்
இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ரஹானே 49 ரன்களும், விராட் கோலி 44 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் ஜேமிசன் 22 ஓவர்கள் வீசி 31 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பிறகு, தங்கள் முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து, மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரட்டை சதம் விளாசிய டெவோன் கான்வே 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, டாம் லாதம் 30 ரன்களில் வெளியேறினார். இந்தியா சார்பில், அஷ்வின், இஷாந்த் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
அட்டகாச பவுலிங்
இந்நிலையில், இன்று ஐந்தாவது நாள் ஆட்டம் ஒருமணி நேரம் தாமதமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால், இதில் இந்திய பவுலர்கள் டெலிவரி மிகச் சிறப்பாக உள்ளது. தெளிவாக உள்ளது. டார்கெட் நோக்கி வீசுவது போல இருப்பது இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று. இந்தியாவின் மூன்று பேஸர்களும் நேர்த்தியை முதல் முக்கால் மணி நேரத்தில் அட்டகாசமாக பந்து வீசியுள்ளனர்.
எகிறும் அவுட் ஸ்விங்
குறிப்பாக, ஷமி வீசிய ஓவர் நியூசிலாந்து வீரர்களை ரொம்பவே பயம் கொள்ள வைத்திருக்கிறது. அவர் வீசிய முதல் ஓவரில் 2 பந்துகள், வில்லியம்சனின் கையை பதம் பார்த்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். பந்து எங்கு பிட்ச் ஆகிறது, எங்கு வெளியே செல்கிறது என்பதை கூட கணிக்கமுடியவில்லை. இதில் நாம் நோட் பண்ண வேண்டிய விஷயம், அவர் அதிகம் அவுட் ஸ்விங் வீசுகிறார் என்பதே.
விக்கெட் உறுதி
பும்ரா ஓவரை ஓரளவுக்கு எளிதாக டீல் செய்யும் கேன் வில்லியம்சன் மற்றும் ராஸ் டெய்லர் பார்ட்னர்ஷிப்பால் ஷமி மற்றும் இஷாந்த் பந்துவீச்சை சமாளிக்க முடியவில்லை. இஷாந்த் பெரிதாக ஸ்விங் செய்யவில்லை. ஆனால், ஷமியின் பந்துவீச்சில் ஸ்விங் மற்றும் பேஸ் இரண்டும் இருக்கிறது. நிச்சயம், அடுத்த 5 ஓவர்களுக்குள் ஒரு விக்கெட் எதிர்பார்க்கலாம்.