Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கலங்கிப்போன சிராஜ்.. திரையில் ஒளிபரப்பப்பட்ட அந்த வாசகம்.. வெளியேற்றப்பட்ட ஆஸி. "இனவெறி" ரசிகர்கள்!

சிட்னி: இந்திய வீரர்களை தாக்காத வார்த்தைகள் மூலம் சீண்டி வந்த ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சிட்னியில் இந்திய அணி மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து இன ரீதியான தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறார்கள். சிராஜ், பும்ரா, சைனி போன்ற வீரர்கள் தொடர்ந்து குறி வைத்து தாக்கப்படுகிறார்கள்.

இந்திய வீரர்களை குரங்கு என்று கூறி ஆஸ்திரேலிய ரசிகர்கள் விமர்சனம் செய்துள்ளனர். இந்த சம்பவம் இன்று பெரிய பரபரப்பானது.

புகார்

புகார்

இந்திய வீரர் சிராஜ் பீல்டிங் செய்யும் போது இன்றும் இதேபோல் இன வெறி தாக்குதலுக்கு உள்ளானார். இதனால் மன ரீதியாக அவர் கடுமையான பாதிப்பிற்கு உள்ளானார். அவர் உடனே ரஹானேவிடம் இது தொடர்பாக புகார் அளிக்க, ரஹானே நடுவர்களிடம் புகார் அளித்தார்.

ஒருவர் ஓடிவிட்டார்

ஒருவர் ஓடிவிட்டார்

இதையடுத்து இன வெறி தாக்குதல் குறித்து உடனே விசாரிக்கப்பட்டது. விசாரணையின் இந்திய வீரர்களை தாக்கி பேசிய ரசிகர் ஒருவர் ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவரின் நண்பர்கள் அதே இடத்தில் இருந்துள்ளனர்.

வெளியேற்றம்

வெளியேற்றம்

இதையடுத்து உள்ளே வந்த பாதுகாவலர்கள் அந்த ரசிகர்களை வெளியேற்றினார்கள். மொத்தமாக 5 பேர் வெளியேற்றப்பட்டனர். பிங் மற்றும் மஞ்சள் நிறத்தில் உடை அணிந்து இருந்த இனவெறி ரசிகர்கள் ஒருவழியாக மொத்தமாக வெளியேற்றப்பட்டனர்.

திரையில் வாசகம்

திரையில் வாசகம்

இதையடுத்து அங்கு இருந்த திரையில் பெரிய அளவில் வாசகம் ஒன்று காட்டப்பட்டது. அதில் வீரர்கள் யாரவது இனவெறி தாக்குதலுக்கு உள்ளானால் உடனே புகார் அளிக்கவும். இனவெறி தாக்குதல்களை ஒருபோதும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.

கொதிப்பு

கொதிப்பு

இனவெறி தாக்குதல் நடத்தும் ரசிகர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று வாசகம் காண்பிக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரிய அளவில் விமர்சனத்தை சந்தித்துள்ளது. கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் வீரர்கள் , விமர்சகர்கள் இதை கடுமையாக விமர்சித்துள்ளனர் .

Story first published: Sunday, January 10, 2021, 10:38 [IST]
Other articles published on Jan 10, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+