Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பொறுக்க முடியாது.. நேராக நடுவரிடம் முறையிட்ட ரஹானே.. உள்ளே குழுவாக வந்த செக்யூரிட்டி.. பரபரப்பு!

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் 4வது நாள் ஆட்டத்திலும் இந்திய வீரர்கள் மீது இன ரீதியான தாக்குதல் நடதப்பட்டது சர்ச்சையாகி உள்ளது.

ஆஸ்திரேலியாவில் இந்திய வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் ஆடி வரும் நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் இந்திய வீரர்களை இன ரீதியாக தாக்கி வருகிறார்கள். மத ரீதியாகவும், இன ரீதியாகவும் ஆஸ்திரேலிய ரசிகர்கள் இந்திய வீரர்களை சீண்டி உள்ளனர்.

கடந்த மூன்று நாட்களாக இந்திய வீரர்களை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்கள் இப்படி விமர்சனம் செய்து வந்துள்ளனர்.

மோசம்

மோசம்

இந்த நிலையில் நேற்று நடந்த போட்டியில் இந்திய வீரர்களை ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் சிலர் குரங்கு என்று கூறி கிண்டல் செய்துள்ளனர். சிராஜ் , பும்ரா இருவரையும் குறி வைத்து ஆஸ்திரேலிய ரசிகர்கள் தாக்கி உள்ளனர். இது தொடர்பாக நேற்று புகார் அளிக்கப்பட்டது .

புகார்

புகார்

இந்த புகாரை தொடர்ந்து இன்று வீரர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. பவுண்டரி எல்லை கோட்டிற்கு அருகே கூடுதல் பாதுகாவலர்கள் நிறுத்தப்பட்டனர். இந்த நிலையில் இன்றும் சிராஜ், பும்ராவை ஆஸ்திரேலிய ரசிகர்கள் சீண்டி உள்ளனர்.

சிராஜ்

சிராஜ்

சிராஜ் பீல்டிங் செய்யும் போது மீண்டும் அவரை நோக்கி கடுமையான இனவெறி தாக்குதல்களை ஆஸ்திரேலிய ரசிகர்கள் சிலர் தொடுத்துள்ளனர். இதனால் கோபம் அடைந்த சிராஜ் வேகமாக சென்று ரஹானேவிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து ரஹானே கோபம் அடைந்து வேகமாக சென்று நடுவரிடம் புகார் அளித்தார் .

புகார்

புகார்

இதையடுத்து நடுவர்கள் பெவிலியன் சென்று இதுகுறித்து விவாதம் செய்தனர். இதன்பின் பாதுகாவலர்கள் வேகமாக மைதானத்திற்கு உள்ளே வந்தனர். இந்திய வீரர்களை சீண்டிய ஆஸ்திரேலிய ரசிகர்கள் யார் என்று விசாரிக்கப்பட்டது. 6க்கும் அதிகமான பாதுகாவலர்கள் வேகமாக மைதானத்திற்குள் வந்து ரசிகர்களிடம் விசாரணை செய்தனர்.

 வெளியேற்றினார்கள்

வெளியேற்றினார்கள்

இதையடுத்து நீண்ட விசாரணைக்கு பின் ஆஸ்திரேலியா ரசிகர்கள் சிலர் வெளியேற்றப்பட்டனர். இதன் காரணமாக ஆட்டம் சில நேரம் நிறுத்தப்பட்டது. ஆஸ்திரேலியாவில் இந்திய ரசிகர்கள் அடுத்தடுத்து இன வெறி தாக்குதலுக்கு உள்ளாவது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Story first published: Sunday, January 10, 2021, 10:01 [IST]
Other articles published on Jan 10, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+