Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

திக்குமுக்காடிய இந்திய வீரர்கள்.. கவனத்தை சிதற வைக்கும் ஆஸி.யின் பிளான்.. இன்னும் 3 நாள்தான் பாய்ஸ்!

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணி தயாராக வேண்டிய சூழ்நிலையில், இந்திய வீரர்களின் கவனத்தை சிதற வைக்கும் வகையில் நிறைய சம்பவங்கள் நடந்து வருகிறது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி மூலம் முதல் போட்டியில் ஏற்பட்ட அவமான காரணமான தோல்விக்கு சிறப்பான பதிலடியை இந்திய அணி கொடுத்துள்ளது.

இந்த நிலையில் வரும் 7ம் தேதி இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடக்க உள்ளது.

என்ன

என்ன

இதற்காக இந்திய அணி தீவிரமாக பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இரண்டு 2 நாட்களுக்கு முன்புதான் இந்திய அணி இதற்காக பயிற்சியை தொடங்கியது. இடையில் நேற்று மழை காரணமாக பயிற்சி தடைபட்டது. இன்று மெல்போர்னில் இருந்து சிட்னிக்கு வீரர்கள் பயணம் மேற்கொண்டதால் இன்றும் இதுவரை வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை.

ஒரே ஒரு நாள்

ஒரே ஒரு நாள்

மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு ஒரே ஒரு நாள் மட்டுமே இந்திய அணி இதுவரை பயிற்சி மேற்கொண்டுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் இந்திய வீரர்களின் கவனத்தை சிதற வைக்கும் வகையில் நிறைய சம்பவங்கள் நடந்து வருகிறது. முக்கியமாக இந்திய அணியின் முக்கியமான 5 வீரர்களை தனிமைப்படுத்தி ஆஸ்திரேலிய அணி அழுத்தம் கொடுத்தது.

மோசம்

மோசம்

கொரோனா விதிகளை மீறியதாக கூறி ரோஹித் சர்மா, பண்ட், சுப்மான் கில், பிரித்வி ஷா, சைனி ஆகிய ஐந்து இந்திய வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்த பிரச்சனையிலேயே ஒருநாள் முழுக்க வீணாகிவிட்டது. அந்த நாள் முழுக்க இந்திய வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளவில்லை. இன்னொரு பக்கம் பிரிஸ்போனில் கிரிக்கெட் விளையாட இந்திய அணி பயப்படுகிறது என்று ஆஸ்திரேலிய அணி கூறியுள்ளது.

ஏன் இப்படி

ஏன் இப்படி

அதாவது ஆஸ்திரலியாவை பார்த்து இந்திய அணி பயப்படுவதாக ஆஸ்திரேலிய அணியின் பயிற்சி குழு தெரிவித்துள்ளது.இந்திய வீரர்களை குறைவாக மதிப்பிட்டு, அவர்களின் தன்னம்பிக்கையை சிதைக்கும் வகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் காய்களை நகர்த்தி வருகிறது. விராட் கோலி, பாண்டியா போன்றவர்களும் கொரோனா விதிகளை மீறிவிட்டனர் என்று பழைய விஷயங்களை எல்லாம் ஆஸ்திரேலியா கிளறுகிறது.

சிக்கல்

சிக்கல்

இந்திய வீரர்களின் கவனத்தை சிதற வைக்கும் வகையில் திட்டமிட்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் செயல்படுகிறது. பல்வேறு வகையில் அழுத்தம் கொடுத்து இந்தியாவை வீழ்த்த வைக்க ஆஸி. திட்டமிடுகிறது. கங்குலி காலத்தில் இந்திய அணியை ஆஸ்திரேலிய அணி இதேபோல்தான் சீண்டியது. தற்போது அதேபோல் ஆஸ்திரேலிய அணி செயல்பட தொடங்கி உள்ளது.

3 நாட்கள்

3 நாட்கள்

அடுத்த டெஸ்ட் போட்டி நடக்க இன்னும் 3 நாட்கள் உள்ளது. மீதம் இருக்கும் நாட்களில் எப்படியாவது கிரிக்கெட் பயிற்சியை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. ஆஸ்திரேலியாவின் அழுத்தங்கள் எதற்கும் இடம் கொடுக்காமல் இந்தியா போட்டி மீது கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.

Story first published: Monday, January 4, 2021, 14:34 [IST]
Other articles published on Jan 4, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+