Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“40 நிமிடத்தில் ஆட்டத்தையே மாற்றுகிறார்” இளம் வீரரால் பிரமிப்பில் ரோகித் சர்மா.. அப்படி என்ன நடந்தது

பெங்களூரு: 40 நிமிடங்களில் ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிடுகிறார் என இளம் வீரரை பார்த்து இந்திய கேப்டன் ரோகித் வியப்படைந்துள்ளார்.

இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

குறிப்பாக சொந்த மண்ணில் இதுவரை இலங்கையிடம் ஒரு டெஸ்டில் கூட தோற்றதில்லை என்ற ரெக்கார்டை தக்கவைத்துள்ளது.

ரோகித்தின் சாதனை

ரோகித்தின் சாதனை

ரோகித் சர்மா தலைமை தாங்கிய முதல் டெஸ்ட் தொடர் இதுதான் ஆகும். ஆனால் இந்த 2 போட்டிகளையுமே மூன்றே நாட்களில் முடித்து அனைவருக்கும் ஆச்சரியம் தந்தார். இதுமட்டுமல்லாமல் இதற்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து அணிகளையும் வைட் வாஷ் செய்து அனுப்பி வைத்தார். இப்படிப்பட்ட புகழாரங்கள் வந்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இளம் வீரர் ஒருவரின் பேட்டிங் தான் வெற்றிக்கு முக்கிய காரணம் என ரோகித் வியப்படைந்துள்ளார்.

யார் அந்த நபர்

யார் அந்த நபர்

அதிரடி நாயகனான ரிஷப் பண்ட், இந்த டெஸ்ட் தொடரில் 185 ரன்களை குவித்தார். அதில் அதிவேக சதமடித்து கபில் தேவின் சாதனையை தகர்த்தார். இவர் குறித்து பேசிய ரோகித், பண்ட் எப்படி பேட்டிங் செய்வார் என்பது அனைவருக்கும் தெரியும்.

நாங்கள் அவருக்கு அதற்கான முழு சுதந்திரத்தையும் கொடுக்க விரும்பினோம். அவரின் திட்டத்திற்கு நாங்கள் ஆதரவு கொடுத்தாலும், சில சமயங்களில் ஆட்டத்தின் போக்கை வைத்து ஆட வேண்டும் என அறிவுரை கூறிக்கொண்டு தான் இருக்கிறோம்.

ரோகித்தின் பிரமிப்பு

ரோகித்தின் பிரமிப்பு

சில சமயங்களில் ரிஷப் பண்ட் ஏன் அந்த ஷாட் ஆடுகிறார் என்ற விமர்சனம் எழும். ஆனால் அதே ஷாட்கள் தான் மற்ற போட்டிகளில் உதவுகிறது. இதனால் அவர் எதை கொடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் 40 நிமிடங்களில் ஒரு டெஸ்ட் போட்டியை மாற்ற முடியும் என்றால், அது அவரால் மட்டும் தான் என பாராட்டினார்.

தனித்திறமை

தனித்திறமை

அனைவரும் பேட்டிங் குறித்து பேசினாலும், அவரின் விக்கெட் கீப்பிங் திறமை மிகவும் முன்னேற்றம் கண்டுள்ளது தெரிகிறது. நான் அதை பார்த்து ஆச்சரியப்பட்டு விட்டேன். கேட்ச் பிடிப்பது, டிஆர்எஸ் கேட்பது போன்ற விஷயங்களில் பல முன்னேற்றங்களை அவரிடம் நான் பார்த்துள்ளேன் என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, March 15, 2022, 18:38 [IST]
Other articles published on Mar 15, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+