Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாஸ்.. இந்த அவமானம் தேவையா? பொறாமை பட்ட பாகிஸ்தான்.. தக்க பதிலடி தந்த உம்ரான் மாலிக்..

இந்திய கிரிக்கெட் அணியின் அதிவேக இளம் வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக், தன் மீது பொறாமையுடன் பதில் கூறிய பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி தந்துள்ளார்.

Recommended Video

Pakistan வீரருக்கு தக்க பதிலடி தந்த Umran Malik | *Cricket

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் வளர்ந்து வரும் வீரருக்கான விருதை உம்ரான் மாலிக் பெற்றார். லீக் சுற்றில் தொடர்ந்து 14 போட்டியில் அதிவேகமாக பந்துவீசியதற்காக விருதை வென்றார்.

ஐபிஎல் தொடரில் சில போட்டியில் அதிக ரன்களை விட்டு கொடுத்தாலும், மொத்தம் 22 விக்கெட்டுகளை உம்ரான் மாலிக் வீழ்த்தி அசத்தினார்.

அதிவேக பந்துவீச்சாளர்

அதிவேக பந்துவீச்சாளர்

உலகின் அதிவேக பந்தவீச்சாளர், 150 கிலோ மீட்டருக்கு குறையாமல் பந்துவீச கூடியவர். இந்தியாவின் எதிர்காலம் என்று எல்லாம் உம்ரான் மாலிக்கை முன்னாள் வீரர்கள் பாராட்டி வருகின்றனர். உம்ரான் மாலிக்கை பத்திரமாக கையாள வேண்டும் என்று நட்சத்திர வீரர் ஸ்டெயினும் கூறியுள்ளார். இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் உம்ரான் மாலிக், இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

டி20 உலக கோப்பை

டி20 உலக கோப்பை

டி20 உலககோப்பை ஆஸ்திரேலியாவில் நடப்பாண்டு இறுதியில் நடைபெறுகிறது. வேகப்பந்துவீச்சு சாதகமான ஆடுகளம் என்பதால், உம்ரான் மாலிக்கை தயார் படுத்த இந்தியா முயற்சித்து வருகிறது. இதனால் உம்ரான் மாலிக், தென்னாப்பிரிக்காவுககு எதிரான டி20 போட்டியில் அறிமுகம் ஆவார் என எதிர்பார்க்கப்பட்டது.

பாக். வீரர் கிண்டல்

பாக். வீரர் கிண்டல்

இந்த நிலையில், ஒரு காலத்தில் வேகப்பந்துவீச்சாளர்களை தொழிற்சாலையில் உருவாக்குவது போல் பாகிஸ்தான் தயாரித்து வந்தது. ஆனால் தற்போது பாகிஸ்தானுக்கு இந்தியா டஃப் கொடுக்க தொடங்கி விட்டது. இந்த நிலையில், பாகிஸ்தான் வீரர் ஷாயின் ஷா ஆஃப்ரிடியிடம் உம்ரான் மாலிக் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் ஒரு வார்த்தை கூட பாராட்டாமல், வேகம் உங்களுக்கு உதவாது. ஸ்விங், லைன் லெங்த் மட்டும் தான் உதவும் என கிண்டலாக பதில் அளித்துள்ளார்.

உம்ரான் மாலிக் பதிலடி

உம்ரான் மாலிக் பதிலடி

இதற்கு பதிலடி தரும் விதமாக பேட்டி அளித்த உம்ரான் மாலிக், என்னுடைய ரோல் மாடல்கள் வக்கார் யூனிஸ், வாசிம் அக்ரம் கிடையாது. நான் என்னை போலவே சுயமாக செயல்படுகிறேன்,. இந்திய வீரர்கள் முகமது ஷமி, பும்ரா, புவனேஸ்வர் குமார் ஆகியோர் தான் எனது ரோல் மாடல்கள் என்று பேட்டி அளித்து பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி தந்துள்ளார். நாட்டுக்காக சிறப்புக விளையாடி வெற்றியை தேடி தருவதே லட்சியம் என்றும் அவர் பதில் அளித்துள்ளார்.

Story first published: Tuesday, June 7, 2022, 10:10 [IST]
Other articles published on Jun 7, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+