Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலி இல்லை.. ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு

Recommended Video

ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு- வீடியோ

மும்பை : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிரடியாக இந்திய அணியின் கேப்டன் மற்றும் முக்கிய வீரர் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பை ஏற்கிறார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 15 முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் ஆறு ஆசிய நாடுகள் பங்கேற்க உள்ளன. இதில் பாகிஸ்தான் அணியோடு இந்தியா முதல் போட்டியில் ஆட உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Indian Squad for Asia cup announced today. Virat Kohli given rest and Rohit to lead the team

அதில் முக்கிய மாற்றமாக விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டு, ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பை ஏற்கிறார். அனுபவ தோனி இருப்பதால் அவர் கை கொடுப்பார் என தெரிகிறது. ஷிகர் தவான் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அம்பத்தி ராயுடு மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார். பந்துவீச்சாளர்களில் வழக்கமான வீரர்கள் தவிர்த்து ஷர்துல் தாக்கூர், காலீல் அஹ்மத் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். கீழே முழு வீரர்கள் பட்டியலை காணலாம்.

ஆசிய கோப்பைக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான் (துணை கேப்டன்), கேஎல் ராகுல், அம்பத்தி ராயுடு, மனிஷ் பாண்டே, கேதார் ஜாதவ், தோனி (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், ஹர்திக் பண்டியா, குல்தீப் யாதவ், யஸ்வேந்திரா சாஹல், அக்சர் பட்டேல், புவனேஸ்வர் குமார், ஜஸ்ப்ரிட் பும்ரா, ஷர்துல் தாக்கூர், காலீல் அஹ்மத்

Story first published: Saturday, September 1, 2018, 13:56 [IST]
Other articles published on Sep 1, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+