ரோகித் சர்மா இப்ப இல்லீங்க.. 5 வருஷத்துக்கு முந்தியே அப்படித் தான்..! கவனிக்காத ரசிகர்கள்

லண்டன்: 5 ஆண்டுகளில் ரோகித் சர்மா 22 சத்தங்களை விளாசி தள்ளி இருக்கிறார். அதில் ஒவ்வொரு ஆண்டும் கேப்டனை புறந்தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பி நடந்த போட்டியில் இந்தியா, வங்கதேசத்தை சந்தித்தது. போட்டி பர்மிங்காம்மில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் இந்தியாவிடம் வங்கதேசம் 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

அந்த ஆட்டத்தில் தொடக்க வீரர் ரோகித் சர்மா 92 பந்துகளில் 104 எடுத்து ஆட்டமிழந்தார். அதன் மூலம் நடப்பு உலகக்கோப்பையில் நான்கு சதம் அடித்து சாதனை படைத்தார். இந்நிலையில் 5 ஆண்டுகளில் ரோகித் சர்மா 22 சதங்களை விளாசி உள்ளார்.

9 சதங்கள்

9 சதங்கள்

அதில் முக்கிய அம்சம்.. ஒவ்வொரு ஆண்டும் இந்திய அணியின் கேப்டனை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார். மேலும் ஒருநாள் போட்டியில் ரோகித்தை விட கோலி அதிக சதங்களை அடித்து முதலிடத்தில் உள்ளார். கடந்த ஆண்டில் ஒருநாள் போட்டியில் அவர் 9 சதங்களையும், கோலி 6 சதங்களையும் அடித்துள்ளனர்.

15 சதங்கள்

15 சதங்கள்

கடந்த 2 ஆண்டுகளில் ஒருநாள் போட்டியில் ரோகித் 15 சதங்கள் அடித்தார். அவருக்கு அடுத்தபடியாக, கோலி 14 சதங்களை அடித்தார். 5 ஆண்டுகளுக்கு முன்பு அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்கள். ஏன் என்றால், 2011ம் ஆண்டு உலக கோப்பை அணியில் அவர் இடம் பெறவில்லை.

முக்கிய வீரரானார்

முக்கிய வீரரானார்

குறிப்பிட்ட அந்த ஆண்டில் உலக கோப்பை தொடருக்கான அணியில் அவர் இல்லை. அந்த ஏமாற்றம் கிரிக்கெட்டை விட்டே விலகி விடலாம் என்று அவருக்கு தோன்றியது. ஆனால், காலங்கள் செல்ல, செல்ல.. 2015ம் ஆண்டு உலக கோப்பை அணியில் இடம் பிடித்தார். 2 அரைசதங்கள் மற்றும் ஒரு சதம் என 8 போட்டிகளில் 330 ரன்கள் குவித்தார். தொடர்ந்து நடப்பு தொடரில் இந்தியாவின் முக்கிய வீரராக மாறியிருக்கிறார்.

ராயுடு கவனிப்பாரா?

ராயுடு கவனிப்பாரா?

நடப்பு தொடரில் அம்பத்தி ராயுடுவிற்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்ட நிலையில், அவர் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் விடை பெறுவதாக அறிவித்தார். அம்பத்தி ராயுடுவின் முடிவு பலருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. அவர் ரோகித்தை போன்று போராடி அணியில் வந்திருக்க வேண்டும் என்று கருத்துகள் கூறப்பட்டு வருகின்றன.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

English summary
Indian team ace batsman rohit sharma scored 22 centuries in last 5 years.
Story first published: Friday, July 5, 2019, 20:45 [IST]
Other articles published on Jul 5, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Mykhel sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Mykhel website. However, you can change your cookie settings at any time. Learn more