Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“தோனி, கோலி ஓரமா போங்க ” டி20 கிரிக்கெட்டில் ரோகித் படைக்கப்போகும் மெகா சாதனை.. சக வீரர்களே வியப்பு

தர்மசாலா: டி20 கிரிக்கெட்டில் யாரும் படைத்திராத பிரமாண்ட சாதனையை கேப்டனாக ரோகித் சர்மா படைக்கவுள்ளார்.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி இன்று இரவு தர்மசாலா மைதானத்தில் நடைபெறுகிறது.

3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஏற்கனவே ஒரு வெற்றியுடன் முன்னிலை பெற்றுள்ள சூழலில் இன்று 2வது போட்டி நடக்கிறது.

2வது போட்டி

2வது போட்டி

இந்த போட்டியிலும் வெற்றி பெற்றுவிட்டால் ரோகித் சர்மாவின் தலைமையில் இந்திய அணி தொடர்ச்சியாக 3வது தொடரை கைப்பற்றும். இதற்கு முன்னர் நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் தொடர்களை வைட் வாஷ் செய்திருந்தது. இந்நிலையில் இன்று வெற்றி பெற்றால் உலகில் எந்தவொரு டி20 கேப்டனும் செய்யாத சாதனையை ரோகித் படைப்பார்.

புதிய ரெக்கார்ட்

புதிய ரெக்கார்ட்

அதாவது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் அதிக வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டன் என்ற பெருமையை பெறுவார். அவர் இதுவரை 16 போட்டிகளில் 15 போட்டிகளில் வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளார். இங்கிலாந்து கேப்டன் மோர்கன், நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் ஆகியோரும் இதே அளவு வெற்றியை தான் பெற்றுத்தந்துள்ளனர். இன்னும் ஒரு வெற்றி பெற்றால் முதலிடத்தை பிடிப்பார். இதில் விராட் கோலி 13 வெற்றிகளும், தோனி 10 வெற்றிகளும் பெற்றுத்தந்தனர்.

ஒட்டுமொத்த டி20

ஒட்டுமொத்த டி20

ஒட்டுமொத்தமாக ரோகித் இதுவரை 24 டி20 போட்டிகளில் வழிநடத்தி 22 வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார். இதே போல இன்று வெற்றி பெற்றால் ரோகித்தின் கேப்டன்சியில் இந்தியாவில் தொடர்ச்சியாக பெறப்போகும் 11வது வெற்றியாக இருக்கும்.

அதிவேக சாதனை

அதிவேக சாதனை

இது ஒரு புறம் இருக்க, ஒரு பேட்ஸ்மேனாக ரோகித் சர்மா இன்னும் 19 ரன்களை அடித்தால் டி20 கிரிக்கெட்டில் 1000 ரன்களை கடப்பார். வேகமாக இந்த மைல்கல்லை எட்டப்போகும் இந்திய கேப்டன் இவர் தான். அவர் 27 இன்னிங்ஸ்களில் படைப்பார். இதற்கு முன்னர் விராட் கோலி 30 இன்னிங்ஸ்களிலும், தோனி 57 இன்னிங்ஸ்களிலும் இந்த மைல்கல்லை எட்டினார்.

Story first published: Saturday, February 26, 2022, 10:01 [IST]
Other articles published on Feb 26, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+