Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"கடவுள்" இல்லாமல் முதல் முறையாக களம் இறங்கும் இந்தியா...!

சென்னை: கிரிக்கெட்டின் கடவுள் என்று ரசிகர்களால் போற்றி புகழப்படும் சச்சின் டெண்டுல்கர் இல்லாமல் முதல் முறையாக இந்திய அணி உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரை சந்திக்கப் போகிறது.

எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து .... என்று எல்லோரும் சிலாகித்துச் சொல்லும் அளவுக்கு மிக நீண்ட நெடிய கிரிக்கெட் வாழ்க்கை சச்சினுடையது. அவர் இல்லாத உலகக் கோப்பைப் போட்டி சமீபத்திய தலைமுறைக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், 6 உலகக் கோப்பைப் போட்டித் தொடர்களில் பங்கேற்ற சாதனையாளர் சச்சின்.

6 முறை கலந்து கொண்ட போதிலும் கூட கடைசி முறையில்தான் சச்சினுக்கு உலகக் கோப்பை நனவாகியது. இன்று சச்சின் இல்லாத நிலையில் இந்திய அணி உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் பங்கேற்கவுள்ளது.

இந்திய கிரிக்கெட்டின் கடவுள்

இந்திய கிரிக்கெட்டின் கடவுள்

இந்திய கிரிக்கெட்டின் கடவுளாக ரசிகர்களால் பார்க்கப்பட்டவர் சச்சின். அவர் இல்லாத கிரிக்கெட்டை ரசிகர்களால் நினைத்துக் கூட பார்க்க முடியாத நிலை இருந்தது.

சோகத்தை மாத்து.. மனசைத் தேத்து

சோகத்தை மாத்து.. மனசைத் தேத்து

அப்படிப்பட்ட சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டிலிருந்து 21 ஆண்டு காலத்திற்குப் பிறகு ஓய்வு பெற்றுச் சென்றபோது ரசிகர்கள் துடித்துப் போய் விட்டார்கள். இருப்பினும் நிதர்சனத்தைப் புரிந்து கொண்டு இந்திய அணியின் இதர ரசிகர்களை ரசிக்க ஆரம்பித்து விட்டனர்.

அவரது இடத்தில் இனி இவர்...!

அவரது இடத்தில் இனி இவர்...!

டிவி சீரியல்களில் வருவது போல சச்சின் இடத்தில் தற்போது கோஹ்லி வந்து உட்கார்ந்து விட்டார். சச்சினுக்கு இருந்தது போல ரசிகர்கள் மத்தியில் பேராதரவு கோஹ்லிக்கு கிடைத்து வருகிறது.

உலகக் கோப்பைப் போட்டியில் சச்சின்

உலகக் கோப்பைப் போட்டியில் சச்சின்

சச்சினைப் பொறுத்தவரை, உலகக் கோப்பைப் போட்டிகளில் அவர் நிறைய முத்திரை பதித்துள்ளவர் என்பதில் சந்தேகம் இல்லை.

அதிக போட்டித் தொடர்

அதிக போட்டித் தொடர்

அதிக அளவிலான போட்டித் தொடர்களில் ஆடிய சாதனை சச்சினுக்கு உண்டு. அதாவது 6 தொடர்களில் அவர் தொடர்ந்து பங்கேற்றுள்ளார்.

அதிக போட்டிகள்

அதிக போட்டிகள்

அதேபோல அதிக அளவிலான உலகக் கோப்பைப் போட்டிகளில் ஆடிய சாதனை ரிக்கியிடம் உள்ளது. அவர் 46 போட்டிகளில் ஆடியுள்ளார். சச்சின் 45 போட்டிகளில் ஆடியுள்ளார்.

அதிக ரன்கள்

அதிக ரன்கள்

உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர் சச்சின்தான். மொத்தமாக 2278 ரன்களை சச்சின் குவித்துள்ளார்.

அதிக அரை சதம் சச்சினே

அதிக அரை சதம் சச்சினே

ஒரு தொடரில் அதிக அளவில் அரை சதம் போட்ட சாதனையாளர் சச்சின்தான். 2003 போட்டியில் அவர் 7 அரை சதங்கள் எடுத்திருந்தார்.

ஒரு தொடரில் அதிகமும் அண்ணனே!

ஒரு தொடரில் அதிகமும் அண்ணனே!

அதேபோல ஒரு தொடரில் அதிக ரன்கள் குவித்தவரும் சச்சின்தான். அதாவது 2003 தொடரில் அவர் 11 போட்டிகளில் 673 ரன்கள் குவித்திருந்தார்.

தொடர்ந்து 4

தொடர்ந்து 4 "ஆஃப்"

தொடர்ந்து நான்கு அரை சதங்கள் அடித்தவர்களின் பட்டியலிலும் சச்சின் இடம் பெற்றுள்ளார்.

உலகக் கோப்பையில் சச்சின்

உலகக் கோப்பையில் சச்சின்

1992ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைப் போட்டித் தொடர்தான் சச்சினுக்கு முதல் உலகக் கோப்பைத் தொடராகும். அந்தத் தொடரில் அவர் 283 ரன்களை எடுத்தார். சராசரி 47.17 ஆகும். இதில் 3 அரை சதங்களை அவர் அடித்தார்.

ரன் குவிப்பு

ரன் குவிப்பு

அடுத்து 1996 (523 ரன்கள்), 99 (253), 2003 (673), 2007 (வெறும் 64 மட்டுமே), 2011 (482 ரன்கள்) என ரன்கள் எடுத்துள்ளார் சச்சின்.

இனி சச்சின் இல்லாமல்

இனி சச்சின் இல்லாமல்

இதுவரை நடந்த உலகக் கோப்பைப் போட்டிகளில் சச்சின் இருந்தார். ஒரு வீரராக மட்டும் இல்லாமல் அணி வீரர்களை தட்டிக் கொடுத்து வழி நடத்திச் செல்பவராகவும் அவர் இருந்தார். ஆனால் இந்த உலகக் கோப்பைப் போட்டியை சச்சின் இல்லாமல் நமது வீரர்கள் சந்திக்கப் போகிறார்கள்.

அம்பாசடராக இருப்பார்

அம்பாசடராக இருப்பார்

நமது அணியில்தான் சச்சின் இருக்க மாட்டார்... ஆனால் உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் சச்சின் கண்டிப்பாக இருப்பார்.. காரணம் அவர் ஐசிசியின் உலகக் கோப்பைப் போட்டிக்கான பிராண்ட் அம்பாசடராக உள்ளாரே!

Story first published: Wednesday, January 7, 2015, 8:41 [IST]
Other articles published on Jan 7, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+