Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எல்லோரையும் பகைத்துக் கொண்டார்.. கம்பீர் பதவியில் கை வைத்தால் குழப்பம்.. முனாப் எச்சரிக்கை

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பது உலகிலேயே மிகவும் கடினமான பணிகளில் ஒன்று. கோடிக்கணக்கான மக்களின் எதிர்பார்ப்புகளையும், அணியில் உள்ள சூப்பர் ஸ்டார் வீரர்களையும் கையாள்வது பெரும் சவால். அதை சிறப்பாக செய்து வரும் கௌதம் கம்பீரை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கினால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என முன்னாள் வீரர் முனாப் பட்டேல் கூறி இருக்கிறார். குறிப்பாக விராட் கோலி, ரோஹித் சர்மா அணியில் தேவையில்லை என அவர் சொன்னதாக சுட்டிக் காட்டி இருக்கிறார்.
.
2024 ஜூலை மாதம் இந்திய அணியின் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றது முதல், கம்பீர் பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். குறிப்பாக, டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் ஆதிக்கம் குறைந்த போது, அணியில் மாற்றங்களைக் கொண்டு வர அவர் தயங்கவில்லை. 2027 ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரில் இடம் பெற வேண்டும் என்றால், கடந்த டிசம்பரில் நடந்த உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடி உங்களது திறமையை நிரூபிக்க வேண்டும் என்று அவர் கண்டிப்புடன் கூறியது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Indian Team Gambhir s Bold Coaching Style pointed out by Munaf Patel citing his Guts to drop Kohli or Rohit

கம்பீரின் இந்த அதிரடிப் போக்கு பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தினாலும், முன்னாள் இந்திய வீரர் முனாப் படேல் அவருக்குப் பலத்த ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "கம்பீரை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கினால் இந்திய கிரிக்கெட் அணியில் பெரிய குழப்பம் ஏற்படும். அவர் உண்மையை முகத்திற்கு நேராகப் பேசக்கூடியவர். பலருக்கு இது பிடிக்காது. நிலைமை தவறாகப் போகும்போது, எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் அவர்களை அணியில் இருந்து நீக்கும் துணிச்சல் அவருக்கு மட்டுமே உண்டு" என்றார்.

மேலும் பேசிய அவர், "விராட் கோலி அல்லது ரோஹித் சர்மா போன்ற ஜாம்பவான்களிடம் 'நீங்கள் வேண்டாம்' என்று சொல்ல எத்தனை பேருக்கு தைரியம் வரும்? நாட்டின் நலனுக்காகவும், பயிற்சியாளர் பணிக்காகவும் எத்தனை பேரை கம்பீர் பகைத்துக் கொள்கிறார் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். வீரர்களைக் கையாள்வது எளிதல்ல, அதை அவர் சரியாகச் செய்கிறார்" என்று முனாப் படேல் கூறி இருக்கிறார்.

முன்னதாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்டில் ரோஹித் சர்மாவை நீக்க கம்பீர் பரிந்துரை செய்ததாகத் தகவல்கள் வெளியாகின. அதேபோல் 2025-ம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் கோலி மற்றும் ரோஹித் மீண்டும் களம் கண்டபோது, அவர்கள் 2027 உலகக்கோப்பைத் திட்டத்தில் இருப்பதை உறுதி செய்ய கம்பீர் மறுத்துவிட்டார்.

இத்தகைய மோதல்களுக்கு மத்தியிலும், கம்பீர் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற பிறகு 2025 சாம்பியன்ஸ் ட்ராபி மற்றும் 2026 டி20 உலகக்கோப்பை என இரண்டு முக்கியக் கோப்பைகளை இந்தியா வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. விரைவில் நடைபெறவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் கம்பீர், ரோஹித் மற்றும் கோலி ஆகிய மூவரும் மீண்டும் இணையவுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Story first published: Wednesday, April 15, 2026, 9:36 [IST]
Other articles published on Apr 15, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+