Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"ரோஹித் இனி தேவையா?".. காரசார விவாதம்.. "சட்டென" எழுந்துச் சென்ற கோலி.. அணியில் "திடீர்" மாற்றம்?

லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்விக்கு பிறகு, இந்திய அணியின் மிக முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ள முடிவு செய்யப்பபட்டுள்ளது. இதில், பல் சீனியர் வீரர்களை தலை உருள வாய்ப்புள்ளதாக தகவல்கள் கசிகின்றன.

ஆம்! சவுத்தாம்ப்டனில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல், பல மாற்றங்களாக வித்திடும் ஆரம்பப் புள்ளியாக அமைந்துள்ளது.

அணியில் எதிர்பார்க்காத சில மாற்றங்கள் இருக்கலாம் என்றே இந்திய அணி நிர்வாகத்துக்கு நெருக்கமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரோஹித் ஷர்மா

ரோஹித் ஷர்மா

இந்த முக்கிய மாற்றத்தில் பல சீனியர் வீரர்களின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக தெரிகிறது. குறிப்பாக ரோஹித் ஷர்மா. வயது 34. ஆம்! இதுதான் பிரச்சனை. அவர் முன்பை விட, இப்போது டெஸ்ட் போட்டிகளில் கூடுதல் சிரத்தை எடுத்து விளையாடுவதாக பல முன்னாள் வீரர்கள் பாராட்டி வருகின்றனர். அதில், உண்மையும் இருக்கிறது. இப்போதெல்லாம், எப்படியாவது 80 பந்துகள் சமாளித்து நின்றுவிடுகிறார். அவ்வளவு தான் அவர் டெஸ்ட் போட்டிகளில் கண்டிருக்கும் முன்னேற்றம்.

இல்லனா நின்னு அடிக்கணும்

இல்லனா நின்னு அடிக்கணும்

ஆனால், அவரால் ஒரு பெரிய இன்னிங்ஸ் ஆட முடியவில்லை. 30 ரன்கள் கேரண்டி தருவது போல் அடித்துவிட்டுச் செல்கிறார். அதில், நான்கு அழகான பவுண்டரிகள் இருக்கின்றன. ஆனால், அதை வைத்து என்ன செய்வது? ஒன்னு, சேவாக் மாதிரி பட்டாசா வெடிச்சுட்டு போகணும். இல்லைனா, பொறுமையா நின்னு பெரிய ரன்களுக்கு கன்வெர்ட் பண்ணனும். இரண்டுமே இல்லையென்றால், என்ன செய்ய? இதுதான் இப்போது இந்திய அணி விவாதத்தில் காரசாரமாக விவாதிக்கப்பட்டிருக்கிறது.

தொடரும் ஆலோசனை

தொடரும் ஆலோசனை

தற்போது இந்திய அணி வீரர்களுக்கு சற்று ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறது. அவரவர்கள் தங்கள் குடும்பத்துடன் இங்கிலாந்தில் பல்வேறு இடங்களுக்கு வெளியே சென்று சுற்றிப்பார்க்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம், கேப்டன், கோச் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மட்டும் இங்கிலாந்துக்கு தொடருக்கான இந்திய அணி தேர்வு குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இப்போதே ஒரு தெளிவான அணி கட்டமைப்பை முடிவு செய்ய வேண்டும் என்று தீர்க்கமாக உள்ளனர்.

கன்சிஸ்டன்சி இருக்குமா?

கன்சிஸ்டன்சி இருக்குமா?

இந்த ஆலோசனை கூட்டத்தில் தான், கேப்டன் கோலி சில ஆலோசனைகளை முன்னெடுத்திருக்கிறார். அதாவது அவர் சொன்ன பாயிண்ட்கள் அனைத்தும் வீரர்களின் வயதை அடிப்படையாக வைத்து, தனது ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார். அதில், ரோஹித் ஷர்மா குறித்து பேசும் போது, 'அவருக்கு இப்போது 34 வயதாகிவிட்டது. இப்போதுதான் டெஸ்ட் போட்டிகளில் சீரியஸ்னஸ் காட்டுகிறார். ஒருவேளை அவர் நல்லபடியாக பிக்கப் செய்து விளையாட தொடங்கினால் கூட, அவரால் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு அணியில் விளையாட முடியும்? அதுவும் கன்சிஸ்டன்ஸியோடு? என்பது தான் கோலி எழுப்பிய முதல் கேள்வியாக அமைந்திருக்கிறது.

Long Time Process

Long Time Process

இரண்டாவதாக, அவர் முன்வைத்த பாயிண்ட் ரோஹித்தின் ஃபிட்னஸ். 10 வருடங்களுக்கு முன்பிருந்த ரோஹித்துக்கும் இப்போது உள்ள ரோஹித்துக்கும் ஃபிட்னஸை பொறுத்தவரை நிறைய வித்தியாசம் உள்ளது. வெயிட் போட்டிருக்கிறார். மூச்சு வாங்குகிறார். விரைவாக இனி அவரால் ஓட முடியுமா? என்பது சந்தேகமே. ஸோ, Long Time Process அடிப்படையில் பார்த்தால், ரோஹித் இனி அணிக்கு தேவையா என்பதையே யோசிக்க வேண்டியிருக்கிறது என்று கோலி தன் கருத்தை முன்வைத்ததாக தெரிகிறது.

எழுந்து சென்ற கோலி

எழுந்து சென்ற கோலி

அதேசமயம், கோலியின் கருத்துக்கு, சில எதிர் கருத்துக்களும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதில், பாதி கிணற்றை தாண்டி வந்த பிறகு, இப்போது ரோஹித் குறித்து கேள்வி எழுப்புவது சரியாக இருக்காது. அவர் இன்னமும் சர்வதேச ஒருநாள், டி20 போட்டிகளில், அணியின் மேட்ச் வின்னராக இருக்கிறார். மிக முக்கியமாக கேப்டனுக்கு ஆலோசனை வழங்கும் இடத்திலும் இருக்கிறார். 5 முறை அவரது தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, கோப்பையை வென்றிருக்கிறது. ஸோ, அவரது கேப்டன்ஷிப் எபிலிட்டி நமக்கு நிச்சயம் உதவும் என்று சில கருத்துக்கள் வெளியாக, காரசார விவாதம் அரங்கேறி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருக்கட்டத்தில், கோலி மீட்டிங்கை முடித்துக் கொள்வதாக கூறி எழுந்து சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

Story first published: Tuesday, June 29, 2021, 21:09 [IST]
Other articles published on Jun 29, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+