
வாய்ப்புகள் என்ன
சொல்லப் போனால், கடந்த டி20 உலககோப்பையில் இந்திய அணி தோற்றதுக்கு முக்கிய காரணமே இந்த கூட்டணியின் சொதப்பல தான். பவர்பிளேவில் விக்கெட் இழப்பின்றி 40 ரன்களுக்கு மேல் அடித்தாலே அது அணிக்கு நல்ல தொடக்கமாக அமையும். இந்த நிலையில், கேஎல் ராகுல், ரோகித் கூட்டணிக்கு பதிலாக டிராவிட் முன் காத்திருக்கும் வாய்ப்பு என்ன என்பதை தற்போது காணலாம்.

ரோகித் – கோலி
இந்திய டி20 அணியின் தொடக்க ஆட்டக்காரராக ஆப்கானிஸ்தானுக்கு எதிராக களமிறங்கிய விராட் கோலி சதம் விளாசி அசத்தினார். விராட் கோலி ஏற்கனவே தொடக்க வீரராக ஐபிஎல் போட்டியில் விளையாடிய அனுபவம் உண்டு. இதனால் ரோகித் அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்தால், மறுமுனையில் விராட் கோலி அவருக்கு நல்ல துனையாக நின்று ஆங்கர் ரோல் செய்ய வாய்ப்புள்ளது.

ராகுல்- கோலி
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆசிய கோப்பை போட்டியில் ராகுல், கோலி என்ற கூட்டணியில் தான் களமிறங்கியது. இதன் மூலம் ராகுல் எவ்வித அழுத்தமும் இல்லாமல் அதிரடியாக விளையாட முடியும். ரோகித் சர்மா, 3வது அல்லது 4வது வீரராக களமிறங்கி அதிவேகமாக 30இ 40 ரன்களை அடித்தால் அது அணிக்கு சாதகமாக இருக்கும்.

ரோகித் – சூர்யகுமார்
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரோகித், சூர்யா கூட்டணி தான் களமிறங்கியது. இதில் இரண்டு பேருமே அதிரடியாக ஆடக் கூடியவர்கள் என்பதால், இது இந்திய அணிக்கு நல்ல தொடக்கத்தை அளிக்கும். எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு இந்த ஜோடி சிம்ம சொப்பனமாக விளங்கும். இந்த கூட்டணி அமைந்தால் கோலி, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா என பேட்டிங் வரிசை மிரட்டலாக மாறும்.

ரோகித் – ரிஷப் பண்ட்
ரிஷப் பண்டை ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தொடக்க வீரராக களமிறங்குங்கள் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பும். இடது கை, வலது கை பேட்ஸ்மேன்கள் கூட்டணி என்றாலே, அது எதிரணிக்கு கடும் சவாலை அளிக்கும். மேலும் ரிஷப் பண்டும் தனது இயற்கையான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு நல்ல தொடக்கத்தை அளிக்கலாம்.


Click it and Unblock the Notifications











