நாளைக்கு முக்கிமான மேட்ச்.. ஆனா... பயிற்சியில் இப்படி ஒரு சிக்கல்.. கவலையில் இந்திய அணி
Recommended Video
மான்செஸ்டர்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நாளை முக்கிய போட்டி உள்ள நிலையில், பயிற்சி செய்வதில் எழுந்த சிக்கல் இந்திய அணி வீரர்களை சோர்வடைய வைத்துள்ளது.
உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைப்பெற்று வருகிறது. பரபரப்பான இந்த போட்டியில், புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்து, அரை இறுதிக்குள் நுழைய எதிர்பார்த்ததை விட கடுமையான போட்டி நிலவும் நிலை உருவாகி வருகிறது. எந்த வித சிக்கலும் இல்லாமல் ஆஸி. முதல் அணியாக புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்து, அரையிறுதிக்கு தகுதி பெற்றிருக்கிறது.
இதனிடையே, ஓல்டு ட்ராபோர்டு மைதானத்தில், இந்திய, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நாளை மோதுகின்றன. ஆனால், அந்த போட்டிக்கா, கடந்த இரு நாட்களாக இந்திய அணி வீரர்கள் மைதானத்தில், பயிற்சி மேற்கொள்ள முடியாமல் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விட்டு, விட்டு மழை பெய்து வருவதால், மைதானம் ஈரப்பதத்துடனே காணப்படுகிறது.
இந்திய அணி பயிற்சி
மேலும் வானம் இருண்ட மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. அதனால், பயிற்சி எடுக்க இந்திய அணியினர் திணறி வருகின்றனர். இதையடுத்து, இந்திய வீரர்கள் இன்டோர் கிரவுண்டில் தற்போது பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்திய வீரர்கள் சிக்கல்
பொதுவாக, வெளியே பயிற்சி செய்தால்தான் வீரர்கள் அனைத்து விதமான ஷாட்களையும், பந்துகளையும் பயிற்சி செய்து பார்க்க முடியும். ஆனால் இன்டோர் கிரவுண்டில் அப்படி செய்ய முடியாததால், சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

பேட்டிங் பிட்ச்
இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இங்குதான் நடைபெற்றது. அந்த மைதானம் பேட்டிங்குக்கு சாதகமான பிட்ச் ஆகும். கடந்த முறை இங்கு போட்டி நடந்தபோது அடிக்கடி மழை குறுக்கிட்டது.

தடைபட வாய்ப்பில்லை
ஆனால் மழையால் போட்டி தடைபட வாய்ப்பில்லை. ஏனெனில், நாளை போட்டி நடக்கும் நேரத்தில், வானம் தெளிவாகவும், மழை குறுக்கீடு இல்லாமல் இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏமாற்றத்தில் இந்திய அணி
ஏற்கனவே, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், இந்திய வீரர்கள் வெற்றிக்காக கடுமையாக போராடினர். இறுதியில் வெற்றி பெற்றனர். தற்போது பயிற்சி மேற்கொள்வதிலும் ஏற்பட்டுள்ள சிக்கலால் வீரர்கள் சற்றே ஏமாற்றத்தில் இருக்கின்றனர்.

கிடைக்குமா வெற்றி?
இந்திய அணி 4 ஆட்டத்தில் விளையாட வேண்டி உள்ளது. இதில் இரண்டில் வென்றால் தான் அரை இறுதிக்குள் நுழைய முடியும். இதனால் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி 5-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

சவால் கொடுத்த ஆப்கன்
பலவீனமான ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்திய வீரர்கள் தட்டு தடுமாறி தான் வெற்றி பெற்றனர். ஆப்கானிஸ்தான் கடுமையான சவாலை கொடுத்தால், இந்தியா, வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக மிகவும் கவனமாக விளையாட வேண்டும்.

வெஸ்ட் இண்டீஸ்
புவனேஸ்வர்குமாருக்கு பதிலாக விளையாடிய முகமது சமி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் திறமையை வெளிப்படுத்தினார். அதே வேளையில் இந்தியாவை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் வெஸ்ட்இண்டீசும் இருக்கிறது. நியூசி.க்கு எதிரான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் நூலிழையில் வெற்றியை தவற விட்டது. அதனால் அந்த அணி இந்தியாவுக்கு எதிராக சவால் விடும் வகையில் விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications