அகமதாபாத்திற்கு இன்னிக்கு கிளம்பறாங்க இந்திய டீம்.. கலக்கல் போட்டிகளுக்கு கியாரண்டி!
சென்னை : இந்தியா -இங்கிலாந்து இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடந்து முடிந்துள்ளன.
இறுதி 2 போட்டிகள் அகமதாபாத்தின் மோதேரா மைதானத்தில் நடைபெறவுள்ளன.
இதையொட்டி இந்திய அணி இன்று தங்களது பயணத்தை சென்னையிலிருந்து அகமதாபாத்திற்கு துவக்கவுள்ளனர்.

இந்தியா -இங்கிலாந்து இடையிலான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. சென்னையில் நடைபெற்ற இந்த இரு போட்டிகளில் இந்தியா முதல் போட்டியில் மோசமான தோல்வியையும் இரண்டாவது போட்டியில் அபாரமான வெற்றியையும் பெற்றுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியின்ஷிப் இறுதிப்போட்டிக்கு இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு உள்ளது.
இந்நிலையில் அகமதாபாத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மோதேரா மைதானத்தில் அடுத்த இரு டெஸ்ட் போட்டிகள் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையில் நடைறெவுள்ள நிலையில், அகமதாபாத்திற்கு இன்று தங்களது பயணத்தை இந்திய வீரர்கள் துவக்கவுள்ளனர். போட்டி வரும் 24ம் தேதி துவங்கவுள்ள நிலையில் தொடர்ந்து தங்களது பயிற்சிகளை இரு அணி வீரர்களும் மேற்கொள்ளவுள்ளனர்.


Click it and Unblock the Notifications