வீதிக்கு வந்த ரோகித், கோலி சண்டை..! அனுஷ்காவை பாலோ பண்ணும் கோலி கோஷ்டியின் அந்த வீரர்கள்
Recommended Video
மும்பை: கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவை டுவிட்டர் பக்கத்தில் இளம் வீரர்கள் ராகுல், சாஹல் ஆகியோர் பின்தொடருவதால், கோலியின் ஆதரவாளர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
உலக கோப்பையில் நியூசிலாந்திடம் அரையிறுதியில் தோற்று இந்தியா வெளியேற, அதில் எழுந்த புகைச்சல் இன்னும் தீரவில்லை. முன்னாள் கேப்டன் 7வது இறங்கியது, துணை கேப்டன் ரோகித் ஆலோசனையை கோலி பின்பற்றாததே காரணம் என்று கூறப்படுகிறது.
அந்த தொடர் முடிந்து, தோனி 2 மாதங்கள் ஓய்வை எடுத்து, ராணுவ பணிக்கு சென்று விட்டார். இந்திய அணியும் வெஸ்ட் இண்டீஸ் தொடரை சந்திக்க அமெரிக்கா போய் விட்டது. ஆனால், பிரச்சனை முடிந்தபாடில்லை.

கோஷ்டி, ஆதரவு
ரோகித் சர்மாவுக்கு ஆதரவாக சில வீரர்களும், கேப்டன் விராட் கோலிக்கு ஆதரவாக சில வீரர்களும் தனித்தனியாக செயல்படுவதாக தெரிகிறது. கோலி, ரோகித் விரிசல் இப்போது அதிகரித்து இருப்பதாகவும் இருவருக்குமான பனிப் போர் முற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் பதிவு
இந்திய கிரிக்கெட் அணியின் துணைகேப்டன் ரோகித் சர்மா, கோலி மனைவி அனுஷ்கா சர்மாவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின் தொடர்ந்து வந்தார். ஆனால் திடீரென்று அவரை பின் தொடர்வதில் இருந்து ரோகித் வெளியேறி இருக்கிறார்.

முற்றிய பிரச்னை
விராட் கோலியின் பக்கத்தை பின் தொடர்வதில் இருந்து அவர் எப்போதோ விலகி விட்டார். ரோகித்தின் மனைவி ரித்திகாவும் அனுஷ்காவை பின் தொடர்வதில் இருந்து விலகியுள்ளார். இதையடுத்து அவர்கள் பிரச்சினை முற்றியதாக தெரிகிறது.

உறுதியானது மோதல்
அவர்களது டுவிட்டர், இன்ஸ்டாகிராம் பதிவுகளில் போட்டோக்கள் போட்டு தரம் தாழ்த்தி கொள்வது வரை சென்றிருக்கிறது. கோலி, ரோகித் மோதல், இந்திய அணியில் கோஷ்டி என்பதை அந்த பதிவுகள் உறுதிப்படுத்தி இருக்கிறேன்.

ராகுல், சாஹல்
அது கட்டமாக கோஷ்டி வீரர்களும் தம் பங்குக்கு மோதலை மெருகேற்றி வருகின்றனர். இளம் வீரர்கள் ராகுல் மற்றும் சாஹல், அதே அனுஷ்கா சர்மாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ரோகித் அன்பாலோ செய்த பின் புதிதாக பாலோ செய்து வருகின்றனர்.

வீரர்களின் விசுவாசம்
ரோகித்தை மட்டம் தட்டுவதாக நினைத்துக் கொண்டு இருவரும் அவ்வாறு செய்திருக்கின்றனர். அதன் மூலம் ராகுல், சாஹல் இருவரும் கோலி கோஷ்டி என்பதை உறுதிப்படுத்தியதோடு, ரோகித்தை அசிங்கப்படுத்தி விசுவாசத்தை காட்டி இருப்பதாக ரசிகர்கள் பொருமி தள்ளுகின்றனர். ரசிகர்களின் கருத்துகளில் சில உண்மைகளும் இருக்க தான் செய்கின்றன.

ஐபிஎல் அணியில் சாஹல்
ராகுல் கடந்தாண்டுகளில் மோசமாக ஆடினார். ஆனாலும், அவருக்கு அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்து வந்தது. அதே போல மற்றொரு இளம் வீரர் சாஹல், கோலி கேப்டனாக இருக்கும் ஐபிஎல் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை சேர்ந்தவர். அதோடு தற்போது, ரோகித்துக்கு எதிராக அவர்களின் நடவடிக்கையால் பிரச்னையை இன்னும் பெரிதாக்குகிறார்கள் என்றும் ரசிகர்கள் புலம்பி தள்ளுகின்றனர்.


Click it and Unblock the Notifications