For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பயிற்சியின் போது ரோகித் சர்மா காயம்.. அரையிறுதிக்கு முன் நடந்த சோகம்..பதறி போன இந்திய அணி நிர்வாகம்

அடிலெய்ட் : டி20 உலககோப்பை அரையிறுதி சுற்று நாளை முதல் தொடங்குகிறது. இதில் வரும் வியாழக்கிழமை இந்திய அணி, இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

இதற்காக இந்திய அணி வீரர்கள் அடிலெய்ட் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். வீரர்களுக்கு ஓய்வு தேவைப்படும் பட்சத்தில் விருப்பம் உள்ளவர்கள் மட்டும் பயிற்சியில் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த தொடர் முழுவதும் நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தை தவிர மற்ற ஆட்டங்களில் கேப்டன் ரோகித் சர்மா ரன் குவிக்க தடுமாறி வருகிறார்.

டி20 உலகக்கோப்பை 2022 புள்ளிப்பட்டியல்: அரையிறுதியில் யார்? யார்? மோதல்.. போட்டிகள் எப்போது? டி20 உலகக்கோப்பை 2022 புள்ளிப்பட்டியல்: அரையிறுதியில் யார்? யார்? மோதல்.. போட்டிகள் எப்போது?

ரோகித் பேட்டிங்

ரோகித் பேட்டிங்

இதனால், இந்திய அணி களமிறங்கும் நாக் அவுட் சுற்றில் ரோகித் சர்மா தனது அதிரடியை காட்டினால் மட்டுமே வெற்றி பெற முடியும். காரணம், அனைத்து போட்டியிலும் கோலி, சூர்யகுமாரால் அணியை காப்பாற்ற முடியாது. ரோகித் தனது ஸ்பெஷல் இன்னிங்சை ஆடினால் மட்டுமே பெரிய இலக்கை நிர்ணயித்து, இங்கிலாந்துக்கு நெருக்கடி தர முடியும்.

சொதப்பலுக்கு காரணம்?

சொதப்பலுக்கு காரணம்?

ரோகித் சர்மா, டி20 உலககோப்பை தொடருக்கு முன்பு எல்லாம் முதல் பந்தில் இருந்து அதிரடியாக விளையாடும் யுத்தியை கடைப்பிடித்து வருவதாக கூறினார். அது அவருக்கு நல்ல பலனை தந்தது. ஆனால் ஆஸ்திரேலிய ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக செயல்படுவதால், ரோகித் சர்மாவால் தனது அதிரடியை காட்ட முடியவில்லை.

ரோகித் காயம்

ரோகித் காயம்

இதன் காரணமாக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து ரோகித் சர்மா தனது பேட்டிங்கில் தாக்கததை ஏற்படுத்த இன்று தீவிர பயிற்சியில் இறங்கினார். அப்போது, பந்துவீச்சாளர் எறிந்த பந்து, ரோகித்தின் கையை பதம் பார்த்தது. இதனால் வலியால் துடித்த ரோகித் பேட்டிங் செய்யாமல் அப்படியே ஓரமாக அமர்ந்தார். அதனால் பதறி போன இந்திய அணி நிர்வாகிகள் ரோகித்துக்கு சிகிச்சை அளித்தனர்.

ரசிகர்கள் நிம்மதி

ரசிகர்கள் நிம்மதி

இதனைத் தொடர்ந்து ரோகித் சர்மா பயிற்சியிலிருந்து பாதியில் விலகினார். இதனால் இந்திய ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், அதன் பிறகு சிறிது நேரத்திலேயே ரோகித் சர்மா மீண்டும் பேட்டிங் பயிற்சி செய்ய வந்தார். இதனை பார்த்ததும் தான் ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். ரோகித்துக்கு லேசான காயம் தான் என்றும் அச்சப்பட வேண்டியதில்லை என்றும் பிசிசிஐ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Story first published: Tuesday, November 8, 2022, 10:11 [IST]
Other articles published on Nov 8, 2022
English summary
Injury scare for Rohit sharma ahead of semi final vs England
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X