Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மறுபடியும் முதல்ல இருந்தா.. 2018 ஐபிஎல் போட்டியில் இவ்வளவு மாற்றங்களா?

டெல்லி: 2018 ஆம் நடக்க இருக்கும் ஐபிஎல் போட்டியில் நிறைய மாற்றங்கள் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை நடந்த ஐபிஎல் போட்டிகளில் இல்லாத அளவுக்கு இந்த போட்டியில் பல மாற்றங்கள் செய்யப்பட இருக்கின்றன.

ஐபிஎல் போட்டிக்கு சென்னை அணி மீண்டும் திரும்பி இருப்பது தொடங்கி போட்டி நடத்தப்பட இருக்கும் இடத்தில் ஏற்பட போகும் மாற்றங்கள் வரை அனைத்தும் ஆச்சர்யபடுத்தும் வகையில் இருக்கிறது.

முக்கியமாக ஐபிஎல் ரசிகர்களை நகம் கடிக்க வைக்கும் அளவுக்கு ஒரு பெரிய மாறுதல் ஒன்று இந்த போட்டியில் செய்யப்பட இருக்கிறது.

சென்னைக்கு விசில் போடு

சென்னைக்கு விசில் போடு

இந்த ஐபிஎல் போட்டியில் நடக்க போகும் மிக சந்தோஷமான மாற்றம் என்றால் கண்டிப்பாக அது சிஎஸ்கே அணி மீண்டும் போட்டிக்கு திரும்பியதாகத்தான் இருக்கும். 2013ல் நடந்த ஐபிஎல்லில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சிஎஸ்கே அணிக்கு 2015ல் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து 2017 ஐபிஎல் வரை சிஎஸ்கே அணியால் ஐபிஎல் விளையாட முடியாமல் போனது. இந்த நிலையில் சிஎஸ்க்கே , ராஜஸ்தான் அணி மீதான தடை காலம் முடிவடைந்துள்ளது. இந்த இரண்டு அணிகளும் 2018 ஐபிஎல் போட்டியில் மீண்டும் விளையாடுவது உறுதியாகி உள்ளது.

எந்த இடத்தில் நடக்கும்

எந்த இடத்தில் நடக்கும்

தற்போது இந்த ஐபிஎல் போட்டி குறித்து மிக முக்கியமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி இந்த ஐபிஎல் போட்டியை இங்கிலாந்தில் நடத்தலாம் என்று திட்டமிட்டு இருக்கிறார்கள். போட்டியை கண்டிப்பாக இங்கிலாந்தில்தான் நடத்த வேண்டும் என்று இரண்டு அணிகள் கண்டிப்புடன் கேட்டு இருக்கிறது. இந்த இரண்டு அணிகளும் ஐபிஎல் குழுவில் மிகவும் ஆதிக்கம் நிறைந்த அணி என்று கூறப்படுகிறது. ஆனால் மற்ற அணிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது. ஐபிஎல் குழு தலைவர் ராஜிவ் சுக்லா இது குறித்து இன்னும் முடிவு எதுவும் எடுக்கவில்லை.

ஐபிஎல் போட்டியில் புதிய ரூல்

ஐபிஎல் போட்டியில் புதிய ரூல்

சில கால்பந்து தொடர்களில் இருப்பது போல ஐபிஎல் போட்டியில் புதிய ரூல் ஒன்று உருவாக்கப்பட இருக்கிறது. அதன்படி ஒரே சீசனில் ஒரே பிளேயர் 7 போட்டிகளில் விளையாடாமல் இருந்தால் அவரை எந்த அணி வேண்டுமானால் வாங்கி கொள்ளலாம். அதன்படி ஏதாவது ஒரு பிளேயரை அணி நிர்வாகம் வேண்டும் என்றே விளையாட அனுமதிக்காமல் இருந்தால் அவரை மற்ற அணி முறையான பணம் கொடுத்து போட்டியின் போதே வாங்கி கொள்ளலாம். இந்த ரூல் இந்த வருட போட்டியிலேயே அறிமுகப்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மறுபடியும் முதல்ல இருந்து

மறுபடியும் முதல்ல இருந்து

இந்த ஐபிஎல் போட்டியில் மீண்டும் திரும்பும் சென்னை அணி தனது பழைய வீரர்களை அணியில் சேர்த்துக் கொள்ளும் என்று கூறப்பட்டது. ஆனால் சில நாள் முன்பு நடத்த மீட்டிங்கில் கொல்கத்தா அணி இந்த விதிமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசி இருக்கிறது. இதையடுத்து இந்த ஐபிஎல் போட்டியில் மொத்தமாக எல்லா பிளேயர்களும் மீண்டும் ஏலம் விடப்பட்டு முதலில் இருந்து அணிகளில் வீரர்களை சேர்க்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சென்னை அணிக்காக டோணியை 50 கோடி கொடுத்து வாங்க திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Story first published: Wednesday, November 22, 2017, 15:17 [IST]
Other articles published on Nov 22, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+