Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அப்பாடா..இனி பந்துவீச்சாளர்கள் ஹாப்பி அண்ணாச்சி தான்..!! ரஷித் கான் மகிழ்ச்சி

கேப் டவுன்: அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விலகுவதாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டிவில்லியர்ஸ் அறிவித்துள்ளார்.இந்த செய்தி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆனால் ஒரு பிரிவினர்கள் மட்டும் இனி மகிழ்ச்சியில் இருப்பார்கள். அவர்கள் தான் பந்துவீச்சாளர்கள். பின்ன.. எப்படி பந்து போட்டாலும் சிக்ஸர் அடிச்சா அவங்களுக்கு கோவம் வராதா..??

இந்த கருத்தை தான் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் தெரிவித்துள்ளார். டிவில்லியர்ஸ் ஓய்வு பெற்றதால் இனி எங்களை போன்ற பந்துவீச்சாளர்களுக்கு மகிழ்ச்சி தான் என்று குறிப்பிட்ட அவர், டிவில்லியர்ஸை மிஸ் செய்வதாக கூறியுள்ளார்

ஜாஸ் பட்லர்

ஜாஸ் பட்லர்

சின்ன பகவதி போல் சின்ன ஏபிடி என்று பெயர் வாங்கியவர் இங்கிலாந்து அதிரடி வீரர் ஜாஸ் பட்லர். அவர் டிவில்லியர்சின் ஓய்வு குறித்து பதிவிட்டுள்ள டிவிட்டில், டிவில்லியர்ஸ் ஆட்டத்தை பார்க்க தான் சின்ன வயதில் டி.வி.யே பார்ப்பேன் என்று தெரிவித்துள்ளார். ஓய்வு காலத்தை மகிழ்ச்சியாக செலவளியுங்கள் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

சாம் பில்லிங்ஸ்

சாம் பில்லிங்ஸ்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இளம் வீரர் சாம் பில்லிங்ஸ் வெளியிட்டுள்ள பதிவில் , டிவில்லியர்ஸை பார்த்து தான் நான் வளர்ந்ததாக பாராட்டியுள்ளார். கிரிக்கெட்டை வேறு ஒரு தளத்திற்கு கொண்டு சென்றவர் என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

அனில் கும்ப்ளே

அனில் கும்ப்ளே

இந்திய சுழற்பந்துவீச்சின் ஜாம்பவானான அனில்கும்ப்ளே வெளியிட்டுள்ள பதிவில் , தங்களுடைய இரண்டாவது இன்னிங்சிற்கு வாழ்த்துக்கள் என்றும், உங்களது அனல் பறக்கும் ஆட்டத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ளேன், சில சமயம் பந்துவீசும் போது பாதிக்கவும் பட்டு இருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். கிரிக்கெட்டை புதிய வழியில் கையாண்ட ஜாம்பவான் டிவில்லியர்ஸ் என்று பாராட்டியுள்ளார்.

டுமினி

டுமினி

டிவில்லியர்ஸ் உடன் இணைந்து விளையாடியது என் வாழ்நாள் பெருமையாக உண்ர்வதாக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் டுமினி கருத்து தெரிவித்துள்ளார். டிவில்லியர்சின் பயணம் சிறப்பு மிக்க பயணம் என்றும், ஓய்வு நாளை கொண்டாடுங்கள் என்றும் டுமினி கருத்து தெரிவித்துள்ளார்.

இர்பான் பதான்

இர்பான் பதான்

ஏபி. டிவில்லியர்ஸ் இனி கிரிக்கெட் விளையாடப் போவதில்லை என்று நினைப்பதே கவலை அளிப்பதாக இர்பான் பதான் தெரிவித்துள்ளார். கிரிக்கெட்டை மேலும் அழகாக மாற்றிய டிவில்லியர்ஸ்க்கு நன்றி என்று கூறியுள்ளார். இதே போன்று ஜெயவர்தனே, வி.வி.எஸ். லட்சுமணன், டுபிளஸிஸ்,ஷிகர் தவான் உள்ளிட்ட வீரர்களும் டிவில்லியர்ஸ்க்கு பிரியாவிடை அளித்தனர்.

Story first published: Friday, November 19, 2021, 21:38 [IST]
Other articles published on Nov 19, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+