ஸ்டேடியத்துக்கு வெளியே படுத்து தூங்கி.. விடிய,விடிய காத்திருந்த ரசிகர்கள்.. எல்லாம் இதுக்கு தான்
சென்னை: சென்னை, பெங்களூரு அணிகள் மோதும் ஐபிஎல் தொடர் முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை சென்னையில் தொடங்கியது.
12வது ஐபிஎல் தொடர் வரும் 23ம் தேதி முதல் தொடங்குகிறது. ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே தொடங்க உள்ள முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகிறது.
சென்னையில் நடைபெறும் அந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 11:30 மணிக்கு தொடங்கியது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டை வாங்க விடிய விடிய ரசிகர்கள் வரிசையில் காத்திருந்தனர்.

ரூ.6500 டிக்கெட்
ரூபாய் 1,300-ல் தொடங்கி 2500, 5000, 6500 வரை டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது ரூபாய் 1,300-ல் தொடங்கி 2500, 5000, 6500 வரை டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.

விவரம் அறிவிக்கப்படும்
இந்த டிக்கெட்டுகள் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கவுண்ட்டரில் மட்டுமே விற்பனை செய்யப்பட்ட உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கத்தில் மோதும் எஞ்சிய போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டம் எதிரொலி
சென்ற ஆண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தின. அதன் காரணமாக, சென்னையில் ஒரு போட்டியை தவிர மற்றவை நடக்கவில்லை.

போலீஸ் பாதுகாப்பு
இந்த முறை தேர்தல் வருவதால் முதல் நாள் ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதையடுத்து, சேப்பாக்கம் மைதானம் வளாகத்தில் தனியாக டிக்கெட் கவுண்டர்கள் அமைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications