Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

7வது ஐ.பி.எல்.: வெற்றியே பெறாத மும்பையுடன் தோல்வியே காணாத பஞ்சாப் இன்று மோதல்!

லோக்சபா தேர்தல் காரணமாக 7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது. முதல்கட்டமாக 20 லீக் ஆட்டங்கள் ஐக்கிய அரபு எமிரேட்சில் விறுவிறுப்பாக நடந்து முடிந்து விட்டது.

அதைத் தொடர்ந்து எஞ்சிய ஐ.பி.எல். ஆட்டங்கள் முழுவதும் இந்தியாவில் நடைபெறுகிறது. மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று மாலை நடக்கும் 22-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸும், கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் மோதுகின்றன.

நடப்பு ஐ.பி.எல். தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணி கிங்ஸ் லெவன் பஞ்சாப். ஆனால் நடப்பு தொடரில் ஒரு வெற்றி கூட பெறாத அணி மும்பை இந்தியன்ஸ்.

படுமோசமான தோல்வி

படுமோசமான தோல்வி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அத்தனை அணிகளிடமும் அடி வாங்கிவிட்டது மும்பை இந்தியன்ஸ் அணி.

சொந்த ஊரில் சாதிக்கும்?

சொந்த ஊரில் சாதிக்கும்?

அரபு நாட்டில் சொதப்பிய மும்பை அணி சொந்த ஊரில் சாதிக்க முடியும் என்று நம்பிக்கையோடு களமிறங்குகிறது தெரிவித்துள்ளது.

வாழ்வா?சாவா? நிலைமை

வாழ்வா?சாவா? நிலைமை

மும்பை இந்தியன்ஸ் அணியைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு போட்டியும் வாழ்வா-சாவா? என்பதால் இன்று பொறுப்புணர்ந்து அந்த அணி வீரர்கள் விளையாடலாம்.

சராசரிக்கு குறைவான ரன்கள்

சராசரிக்கு குறைவான ரன்கள்

மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தவரை 122, 115, 141, 125, 157 ரன்கள் என சராசரிக்கும் குறைவாகவே எடுத்துள்ளது.

ஆறுதல் தந்த பொல்லார்ட்

ஆறுதல் தந்த பொல்லார்ட்

ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் பொல்லார்ட் 6 சிக்சருடன் 78 ரன்கள் விளாசி ஆறுதல் தந்தார்.

சோபிக்காத ஜாம்பவான்கள்

சோபிக்காத ஜாம்பவான்கள்

ஆனால் கோரி ஆண்டர்சன், கேப்டன் ரோகித் ஷர்மா, மைக் ஹஸ்சி என்று யாரும் பெரிய அளவில் சோபிக்கவே இல்லை.

தொடக்க வீரர் தேறலையே

தொடக்க வீரர் தேறலையே

இன்னும் சரியான தொடக்க வீரர்களே கிடைக்காத நிலையில் மும்பை இந்தியன்ஸ் தோல்வி மேல் தோல்வியை சுமந்து கொண்டிருக்கிறது.

பரவாயில்லை பந்துவீச்சு

பரவாயில்லை பந்துவீச்சு

அதே நேரத்தில் பந்து வீச்சில் மலிங்கா ஜாகீர்கான் நன்றாக வீசுகின்றனர். ஹர்பஜன்சிங் ரன்களை மட்டுப்படுத்தினாலும் விக்கெட்டுகளை எடுக்கவில்லை.

கடந்த ஆண்டில் வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்று மும்பை அணி அசத்தியது. எனவே சொந்த மண்ணிலாவது தோல்வி படலத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பார்களா? என்பது மும்பை ரசிகர்ளின் எதிர்பார்ப்பு

மிரட்டும் பஞ்சாப்

மிரட்டும் பஞ்சாப்

இந்த முறை யாரும் எதிர்பார்க்காத வகையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி விஸ்வரூபம் காட்டி வருகிறது.

தோல்வியே இல்லை

தோல்வியே இல்லை

இந்த சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தோல்வியே சந்திக்காமல் சென்னை, ராஜஸ்தான், ஐதராபாத், கொல்கத்தா, பெங்களூர் ஆகிய அணிகளை தோற்கடித்து 5 வெற்றிகளுடன் கம்பீரமாக முன்னிலை வகிக்கிறது.

மேக்ஸ்வெல் புயல்

மேக்ஸ்வெல் புயல்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பேட்டிங்கில் மேக்ஸ்வெல், டேவிட் மில்லர் மிரட்டி வருகின்றனர்.

சந்தீப் ஷர்மா

சந்தீப் ஷர்மா

இளம் வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் ஷர்மா கடந்த இரு ஆட்டங்களில் ஆட்டநாயகன் விருதை பெற்று விஸ்வரூபம் காட்டியுள்ளார்.

இதுவரை..

இதுவரை..

இவ்விரு அணிகளும் இதுவரை 12 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 5-ல் மும்பையும், 7-ல் பஞ்சாப்பும் வெற்றி பெற்றிருக்கின்றன.

Story first published: Saturday, May 3, 2014, 15:04 [IST]
Other articles published on May 3, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+