Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

8 வது ஐ.பி.எல்.: டெல்லியிடம் இதுவரை தோற்காத சன்ரைசர்ஸ்.. இன்றைய ஆட்டத்திலும் சாதனையை தக்க வைக்குமா?

விசாகப்பட்டினம்: 8 வது ஐ.பி.எல். போட்டிகளில் தலா ஒரு வெற்றியை மட்டும் பெற்றுள்ள டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று மோதுகின்றன.

ஐ.பி.எல். போட்டிகளில் தொடர்ந்து 11 முறை தோல்வி கண்ட டெல்லி டேர்டெவில்ஸ் அணி பஞ்சாப் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றது. அந்த அணியின் யுவராஜ் சிங், மயங் அகர்வால் ஆகியோரது விரைவான அரைசதங்களால் இந்த வெற்றி சாத்தியமானது.

IPL 2015 Daily Guide: Match 13 - Sunrisers Hyderabad Vs Delhi Daredevils

சன் ரைசர்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தியுள்ளது. சென்னை, ராஜஸ்தான் அணிகளிடம் தோற்றுள்ளது. இன்று மோதும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் நடப்பு ஐ.பி.எல். போட்டிகளில் ஒரே ஒரு ஆட்டத்தில்தான் வென்றுள்ளன. இன்றைய போட்டி குறித்த சில விவரங்கள்...

எங்கே எத்தனை மணிக்கு?

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று மாலை 4 மணிக்கு போட்டி நடைபெற உள்ளது.

இந்தியாவில் எப்படி பார்க்கலாம்

சோனி சிக்ஸ்-ஆங்கிலம், சோனி மேக்ஸ்-இந்தி, சோனி ஆத்-பெங்காலி, சோனி கிக்ஸ்-தமிழ், தெலுங்கு மொழி சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.

முக்கிய வீரர்கள்..

சன் ரைசர்ஸ் அணியில் டேவிட் வார்னர், ஷிகர் தவான், பெளல்ட், டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் மயங் அகர்வால், யுவராஜ் சிங், தாஹிர்.. இவர்களில் தாஹிர் நடப்பு தொடரில் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றி முதலிடத்தில் இருப்பவர் என்பது கவனிக்கத்தக்கது.

டெல்லி அணியின் முகமது ஷமி காயம் காரணமாக ஆடாதது அந்த அணிக்கு பெரும் இழப்பு

புள்ளிகள் பட்டியலில்..

டெல்லி அணி 4வது இடத்தில் இருக்கிறது. 2 ஆட்டங்களில் தோல்வி அடைந்து 1-ல் மட்டும் வென்றுள்ளது. சன் ரைசர்ஸ் அணிக்கு 6வது இடம்.. இந்த அணியும் 2-ல் தோற்று ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

நேருக்கு நேர்..

இரண்டு அணிகளும் 4 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.. ஆனால் ஒன்றில் கூட சன் ரைசர்ஸ் அணி தோற்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, April 18, 2015, 14:53 [IST]
Other articles published on Apr 18, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+