Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

16வது போட்டி... அடிமட்ட அணிகள் இரண்டு... அசத்தப் போவது யாரு?

பெங்களூரு: பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இன்று ஒரு ஐபிஎல் போட்டி இரவு 8 மணிக்குத் தொடங்குகிறது. புள்ளிகள் பட்டியலில் அடிமட்டத்தில் கிடக்கும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய இரு அணிகள் இதில் மோதவுள்ளன.

பெங்களூர் அணி 7வது இடத்திலும், மும்பை கடைசி அதாவது 8வது இடத்திலும் உள்ளன. மும்பை அணி இதுவரை ஒரு வெற்றியைக் கூட பெற முடியாமல் தத்தளித்துக் கொண்டுள்ளது.

பெங்களூர் அணி இதுவரை ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. அடுத்த வெற்றிக்கு வெறியாக காத்திருக்கிறது. உள்ளூரில் நடைபெறும் போட்டி என்பதால் இன்றைய போட்டியை பெங்களூர் அணி நம்பிக்கையுடன் எதிர்கொண்டுள்ளது.

ராத்திரி சரியாக 8 மணிக்கு

ராத்திரி சரியாக 8 மணிக்கு

பெங்களூர், மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டி இரவு 8 மணிக்கு பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் தொடங்குகிறது.

இவர்கள் ரொம்ப முக்கியம்

இவர்கள் ரொம்ப முக்கியம்

பெங்களூர் அணியைப் பொறுத்தமட்டில், கிறிஸ் கெய்லைத்தான் அது வெகுவாக நம்பியுள்ளது. ஏப் டிவில்லியர்ஸ் இன்னும் பெரிதாக அசத்தாமல் உள்ளார். விராத் கோஹ்லியும் விஸ்வரூபம் எடுக்காமல் உள்ளார்.

போலார்ட் பொளந்து கட்டினால்

போலார்ட் பொளந்து கட்டினால்

மும்பை அணிக்கு கீரன் போலார்ட் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளார். கோரி ஆண்டர்சன், ரோஹித் சர்மா, லசித் மலிங்கா ஆகியோரும் முக்கிய வீரர்களாக உள்ளனர்.

கிட்டத்தட்ட சம பலம்

கிட்டத்தட்ட சம பலம்

இரு அணிகளும் இதற்கு முன்பு மோதிய போட்டிகளில் மும்பை அணி 8 போட்டிகளிலும், பெங்களூர் அணி 7 போட்டிகளிலும் வென்று கிட்டத்தட்ட சம நிலையில் உள்ளன.

அட.. இதுலயும் ஒரு ஒற்றுமையைப் பாருங்க

அட.. இதுலயும் ஒரு ஒற்றுமையைப் பாருங்க

அதேபோல நடப்புத் தொடரில் பெங்களூர் அணி 7வது இடத்திலும், மும்பை அணி 8வது இடத்திலும் அமர்ந்திருப்பது சுவாரஸ்யமான நம்பர் ஒற்றுமை ஆகும்.

பெங்களூர் படை வீரர்கள்

பெங்களூர் படை வீரர்கள்

பெங்களூர் அணியின் வீரர்கள் பட்டியல்: விராத் கோஹ்லி, ஏப் டிவில்லியர்ஸ், கெய்ல், மிட்சல் ஸ்டார்க், நிக் மாடின்சன், வருண் ஆரோன், அசோக் திண்டா, ஹர்ஷால் படேல், விஜய் ஜோல், அபு நேசிம், சந்தீப் வாரியர், யோகேஷ் தகவலே, யுஸ்வேந்திரா சஹல், ரைலி ரூஸ்ஸோ, இக்பால் அப்துல்லா, மன்வீந்தர் பிஸ்லா, மந்தீப் சிங், திணேஷ் கார்த்திக், பத்ரிநாத், டேரன் சமி, சீன் அப்பாட், ஆடம் மில்னே, டேவிட் வீஸ், சர்பிராஸ் கான், ஜலஜ் சக்சேனா, சிஷிர் பவனே.

மும்பை வீரர்கள்

மும்பை வீரர்கள்

மும்பை அணி: ரோஹித் சர்மா, லசித் மலிங்கா, கீரன் போலார்ட், அம்பட்டி ராயுடு, ஹர்பஜன் சிங், கோரி ஆண்டர்சன், ஆதித்யா தரே, ஜஸ்பிரீத் பும்ரா, ஜோஷ் ஹேஸல்வுட், மெர்ச்சென்ட் டி லாங்கே, பவன் சுயல், ஷ்ரேயஸ் கோபால், லென்டில் சிம்மன்ஸ், ஆரோன் பின்ச், பிரக்யான் ஓஜா, மிட்சல் மெக்கெல்லகன், அபிமன்யூ மிதுன், அய்டன் பிளிஸ்ஸார்ட், அக்ஷய் வகரே, நிதிஷ் ராணா, சித்தேஷ் லேட், ஹர்திக் பாண்ட்யா, ஜெகதீஷா சுசித், உன்முக்த் சந்த், வினய் குமார், பார்த்திவ் படேல்.

Story first published: Monday, April 20, 2015, 13:02 [IST]
Other articles published on Apr 20, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+