For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சென்னையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை! 'சொந்த மண்' சாதனைக்கு முற்றுப்புள்ளி

By Veera Kumar

சென்னை: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாசில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. இதையடுத்து பேட் செய்த மும்பை 19.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை எட்டிப்பிடித்தது.

ஐபிஎல் லீக் ஆட்டத்தில் டோணி தலைமையிலான, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் வெள்ளிக்கிழமை இரவு பலப்பரிட்சை நடத்தின.

IPL 2015 Daily Guide: Match 43 - Chennai Super Kings Vs Mumbai Indians

டாசில் வெற்றி பெற்ற சென்னை அணி கேப்டன் டோணி தனது அணி முதலில் பேட் செய்யும் என்றார். சென்னை அணியில், வேகப்பந்து வீச்சாளர் ஈஸ்வர் பாண்டேக்கு பதிலாக, காயத்தில் இருந்து மீண்ட சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சேர்க்கப்பட்டார்.

சென்னை தொடக்க வீரர் ட்வைன் ஸ்மித் 27 ரன்களும், மெக்கல்லம் 23 ரன்களும் எடுத்து நல்ல தொடக்கம் தந்தனர். ஆனால், சுரேஷ் ரெய்னா 10 ரன்களிலும், டுபிளெசிஸ் 17 ரன்களிலும் அவுட் ஆனதால் மிடில் ஆர்டர் ஆட்டம் கண்டது.

கேப்டன் டோணியும், பவன் நேகியும் இறுதிகட்டத்தில் அணியை விக்கெட் சரிவில் இருந்து மீட்பதற்காக நிதான ஆட்டம் வெளிப்படுத்தினர். இதனால், 20 ஓவர்கள் முடிவில், சென்னை அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது.

டோணி 39 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்த நிலையில், நேகி, கடைசி பந்தில் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து மும்பை அணி 159 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ஆடத்தொடங்கியது.

தொடக்க வீரர்கள் பார்த்திவ் பட்டேலும், சிம்மன்சும் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். 10.1 ஓவர்களிலேயே முதல் விக்கெட்டுக்கு 84 ரன்களை குவித்தது இந்த ஜோடி. ஆனால் பார்திவ் பட்டேல் 45 ரன்களிலும், சிம்மன்ஸ் 38 ரன்களிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

மிடில் ஆர்டர் சரிவு காரணமாக 17.1 ஓவர்களில் 125 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது மும்பை. அப்போது சென்னைக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது. ஆனால், 19வது ஓவரை வீசிய நேகி 25 ரன்களை வாரி வழங்கினார். இதனால் கடைசி ஓவரில் மும்பை வெற்றிக்கு 5 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அந்த ஓவரின் 2வது பந்தில் வெற்றிக்கு தேவையான 159 ரன்களை நான்கே விக்கெட் இழப்புக்கு எட்டியது மும்பை.

இதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி பெற்றது. சென்னை அணி தனது சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 10 போட்டிகளில் தோற்றதில்லை. அந்த சாதனையை மும்பை முறியடித்துள்ளது. மும்பை நடப்பு சீசனில் தொடர்ச்சியாக 5வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

Story first published: Friday, May 8, 2015, 23:35 [IST]
Other articles published on May 8, 2015
English summary
Table-toppers Chennai Super Kings (CSK) will aim to win tonight against Mumbai Indians (MI) and seal a spot in the playoffs of the Indian Premier League 2015 (IPL 8).
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+