Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வாழ்வா, சாவா போட்டியில் இன்று கொல்கத்தாவை எதிர்கொள்கிறது மும்பை....!

மும்பை: வெற்றிபெற்றேயாக வேண்டிய கட்டாயத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை, மும்பை இந்தியன்ஸ் அணி இன்றைய ஐபிஎல் 51வது லீக் ஆட்டத்தில் சந்திக்கிறது.

முதல் 4 லீக் ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வி கண்டு துவண்ட மும்பை இந்தியன்ஸ் அணி, அதன் பிறகு 5 லீக் ஆட்டங்களில் தொடர்ந்து வெற்றி பெற்று எழுச்சி பெற்றது. இதுவரை 6 ஆட்டத்தில் வெற்றி பெற்று இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்த சுற்று வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாகும்.

திடீர் தோல்வி

திடீர் தோல்வி

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த லீக் ஆட்டத்தில் சொந்த மண்ணில் மும்பை அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியிடம் 39 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது அந்த அணிக்கு பெருத்த அடியாக அமைந்தது. இதன் மூலம் அந்த அணி வாழ்வா-சாவா? சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

நெருக்கடியில் மும்பை

நெருக்கடியில் மும்பை

எஞ்சிய இரண்டு லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்று வாய்ப்பு குறித்து நினைத்து பார்க்க முடியும் என்ற நெருக்கடிக்கு மத்தியில் மும்பை அணி, நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சை சந்திக்கிறது. இன்றைய ஆட்டத்தில் தோல்வி கண்டால், அடுத்த சுற்று வாய்ப்பு பறிபோய்விடும் என்பதாலும், உள்ளூரில் நடைபெறும் கடைசி லீக் ஆட்டம் இது என்பதாலும் மும்பை அணி வெற்றிக்காக முழு முயற்சியை மேற்கொள்ளும்.

கொல்கத்தா

கொல்கத்தா

12 ஆட்டத்தில் ஆடி 7 வெற்றியுடன் 15 புள்ளிகள் பெற்று இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிப்பதுடன் அடுத்த சுற்று வாய்ப்பையும் பிரகாசப்படுத்தி கொள்ள முடியும்.

பதிலடி

பதிலடி

தனது கடைசி 3 லீக் ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று இருக்கும் கொல்கத்தா அணி, இந்த போட்டி தொடரின் முதலாவது லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி இருந்தது. அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க மும்பை முயற்சிக்கும். இரு அணியிலும் அதிரடி பேட்ஸ்மேன்களும், சிறந்த பந்து வீச்சாளர்களும் இருப்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

எங்கே எப்போது?

எங்கே எப்போது?

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில், இரவு 8 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. சோனி கிக்ஸ், சிக்ஸ், மேக்ஸ் போன்ற சேனல்களில் நேரடி ஒளிபரப்பை ரசிக்கலாம்.

Story first published: Thursday, May 14, 2015, 14:32 [IST]
Other articles published on May 14, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+