Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அலை அலையான தோல்விகளுக்கு மத்தியில் ஒரு ஆறுதல் வெற்றி.. சந்தோஷத்தில் டெல்லி!

டெல்லி: தொடரந்து தோல்விகளை மட்டுமே சுவைத்து வந்த டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு நேற்றைய வியாழக்கிழமை ரொம்ப நல்ல நாளாக அமைந்தது. ஆம், சொந்த மண்ணில் சந்தித்து வந்த தொடர் தோல்விகளுக்கு நேற்று முற்றுப் புள்ளி வைத்து, மும்பை இந்தியன்ஸ் அணியை அது வீழ்த்தியது.

கேப்டன் ஜேபி டுமினி, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் அரை சதத்தால் பேட்டிங்கில் நிமிர்ந்த டெல்லி அணிக்கு பவுலிங்கில் இம்ரான் தாஹிர் சிறப்பு தேடித் தந்து டெல்லி அணியைக் கரையேற்ற உதவினர்.

தொடர்ந்து சொந்த ஊரான டெல்லியில் 9 தோல்விகளைச் சந்தித்து பெரும் சிரமத்தில் இருந்த டெல்லிக்கு நேற்று முதல் வெற்றி கிடைத்தது அதன் ரசிகர்களுக்கு களிப்பூட்டியுள்ளது. நேற்று நடந்த போட்டியில் 37 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி, மும்பையை வீழ்த்தியது.

பெரிய ரன் ... சூப்பர் பவுலிங்

பெரிய ரன் ... சூப்பர் பவுலிங்

முதலில் பேட் செய்த டெல்லி அணி 190 ரன்கள் என்ற பெரிய ஸ்கோரை எட்டி அசத்தியது. அதன் பின்னர் பந்து வீச்சில் அந்த அணி மிரட்டியதால் மும்பை இந்தியன்ஸால் எதுவும் செய்ய முடியாமல் போனது.

பிரமாதமான பவுலிங்

பிரமாதமான பவுலிங்

இம்ரான் தாஹிர் சிறப்பாக பந்து வீசி 22 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்களைச் சாய்த்தது அந்த அணிக்கு பெரும் பலமாக அமைந்தது. டெல்லியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் மும்பை சுருண்டது.

153 மட்டுமே

153 மட்டுமே

மும்பை அணி தனது சேஸிங்கின்போது 9 விக்கெட்களை இழந்து 153 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அணியின் அதிரடி வீரர்களால் கூட வெற்றியைப் பெற முடியாமல் போனது.

சிம்மனஸ் சீறினாலும் கூட

சிம்மனஸ் சீறினாலும் கூட

மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் லென்டில் சிம்மன்ஸ் அதிரடியாகத்தான் ஆட ஆரம்பித்தார். ஆனால், அவரை அபாரமான முறையில் கேட்ச் செய்து வெளியேறினார் டுமினி. அட்டகாசமான கேட்ச் அது.

தாஹிரிடம் சிக்கிய பார்த்திவ் படேல்

தாஹிரிடம் சிக்கிய பார்த்திவ் படேல்

அதேபோல சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த பார்த்திவ் படேலை மிகச் சிறப்பான முறையில் கேட்ச் செய்து அசத்தினார் இம்ரான் தாஹிர். இதுவும் ஒரு அருமையான கேட்ச் ஆக அமைந்தது.

அசத்திய மிஸ்ரா

அசத்திய மிஸ்ரா

டெல்லி அணியின் சுழற்பந்து வீச்சாளர் அமீத் மிஸ்ரா சிறப்பாக பவுல் செய்து 2 விக்கெட்களைச் சாய்த்தார். இவரது பந்து வீச்சடில் போலார்ட் மற்றும் உன்முக்த் சந்த் ஆகியோர் வீழ்ந்தனர்.

போராடிய ரோஹித் - ராயுடு

போராடிய ரோஹித் - ராயுடு

மறு முனையில் ரோஹித் சர்மாவும், அம்பட்டி ராயுடுவும் (தலா 30 ரன்கள்) போராடிப் பார்த்தனர். ஆனால் முடியவில்லை. ரோஹித்தை கோல்டர் நைல் வீழ்த்தினார்.

ஐயர் - டுமினி

ஐயர் - டுமினி

முன்னதாக டெல்லி அணியின் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேப்டன் டுமினி ஆகியோர் சிறப்பாக ஆடி ஆளுக்கு ஒரு அரை சதம் போட்டனர். ஐயர் அபாரமாக ஆடி 83 ரன்களைக் குவித்தார். டுமினி ஆட்டமிழக்காமல் 78 ரன்களைக் குவித்தார். இதுதான் இந்த சீசனில் இவர்களுக்கு அதிகபட்ச ரன்களாகும்.

ஏமாற்றிய யுவராஜ்

ஏமாற்றிய யுவராஜ்

யுவராஜ் சிங் பெரிய ஸ்கோரை எடுக்கவில்லை. 2 ரன்கள்தான். அவர் மீதான எதிர்பார்ப்பும் இப்போது முன்பு போல இல்லை என்பதால் பெரிய பாதிப்பை யுவராஜின் பேட்டிங் ஏற்படுத்தவில்லை.

Story first published: Friday, April 24, 2015, 9:13 [IST]
Other articles published on Apr 24, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+