Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மீண்டும் ரிட்டர்ன் ஆகிறாரா சச்சின்?

மும்பை: ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக சச்சின் டெண்டுல்கர் களமிறங்கப் போகிறாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் ஆடிவந்தார். 2013ம் ஆண்டு மும்பை கோப்பையை வென்றபோது அந்த அணியில் சச்சின் இடம்பெற்றிருந்தார்.

IPL 2015: Sachin Tendulkar to play IPL 2015 match for Mumbai Indians?

அந்த வெற்றியோடு, டி20யில் இருந்தும் ஓய்வு பெற்றார் சச்சின். இந்நிலையில், இன்று தனது டிவிட்டர் தளத்தில், சச்சின் வெளியிட்டுள்ள படம் ரசிகர்களை பலத்த எதிர்பார்ப்புக்குள்ளாக்கியுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் சீருடையுடன் உள்ள போட்டோவை டிவிட்டரில் வெளியிட்டுள்ள சச்சின், "கண்டுபிடியுங்கள் பார்ப்போம்" என்று கேப்சனும் கொடுத்துள்ளார்.

மும்பை தனது முதல் ஆட்டத்தில் கொல்கத்தாவிடம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றது. இந்நிலையில் மும்பைக்கு உயிர்கொடுக்க சச்சின் மீண்டும் களமிறங்க உள்ளாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதற்கேற்ப கடந்த சில நாட்களாக மும்பை அணியுடன், சச்சின் நெருக்கமாக சுற்றிக்கொண்டுள்ளார்.

மேலும், வரும் 12ம்தேதி சொந்த மண்ணில் மும்பை ஆட உள்ளது. அந்த போட்டியில்தான் சச்சின் களமிறங்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Saturday, April 11, 2015, 18:10 [IST]
Other articles published on Apr 11, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+