8வது ஐ.பி.எல்: வார்னர் அதிரடி ஆட்டம்! மழை குறுக்கீடு! கொல்கத்தாவை 16 ரன்களில் வென்றது ஹைதராபாத்!!
விசாகப்பட்டினம்: 8வது ஐ.பி.எல். போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 16 ரன்களில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வென்றது.
8-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய 19 வது ஆட்டத்தில் வார்னர் தலைமையிலான ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியும் , காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் காம்பீர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதன்படி முதலில் களம் இறங்கிய ஹைதராபாத் அணி சிறப்பான தொடக்கம் கண்டது. தொடக்க வீரர்கள் வார்னர் 91 ரன்களும் தவான் 54 ரன்களும் குவித்து அசத்தினர்.
நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் குவித்தது. இதையடுத்து கொல்கத்தா அணி பேட்டிங் செய்ய தயாரானபோது மழை குறுக்கிட்டது.
இதனால் ஆட்டம் தொடங்குவதற்கு தாமதமானது. இதையடுத்து டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 12 ஓவர்களில் 118 ரன்கள் எடுத்தால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து களம் இறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அணி 12 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
இதனால் 16 ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.


Click it and Unblock the Notifications
