Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

'டி'க்கு முன்னாடி 'இ' வந்தா அது விளம்பரம்.. 'பி'க்கு அடுத்து 'டி' வந்தா அது பேட்டிங் பிரளயம்!

பெங்களூர்: உலகின் பெஸ்ட் பேட்ஸ்மேன் யார் என்பதற்கு விடை கிடைத்துவிட்டது என்று விராட் கோஹ்லி தெரிவித்தார். சுனில் கவாஸ்கரோ, டி வில்லியர்ஸ் ஏபிடி என்று செல்லமாக அழைக்கப்படுகிறார். ஆனால் கிரிக்கெட்டுக்கே அவர்தான் ஏபிசிடி எல்லாமுமே என்று தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் நேற்று நடந்த ஐபிஎல் குவாலிபையர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்-குஜராத் லயன்ஸ் அணிகள் மோதின. 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 2வது பேட் செய்த பெங்களூர் அணியின் கேப்டன் கோஹ்லி டக் அவுட் ஆனார். அந்த அணி 29 ரன்களுக்கு முதல் 5 விக்கெட்டுகளை இழந்தது.

IPL 2016: AB de Villiers is 'AB-CDE' of cricket, says Sunil Gavaskar

இருப்பினும் டி வில்லியர்ஸ் தனியாளாக போராடி கடைசிவரை அவுட்டாகாமல் நின்று 47 பந்துகளில் 79 ரன்கள் குவித்தார்.

போட்டிக்கு பிறகு பேசிய கோஹ்லி, உலகின் சிறந்த கிரிக்கெட் பேட்ஸ்மேன் யார் என்ற விவாதத்திற்கு இப்போட்டியோடு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. டிவில்லியர்ஸ்தான் அந்த சிறந்த பேட்ஸ்மேன். அவர் முன்பு நான் தலை வணங்குகிறேன்.

நான் பார்த்ததில் நெருக்கடிக்கு நடுவே வெளியான சிறந்த ஆட்டம் இதுவாகும். இவ்வாறு கோஹ்லி தெரிவித்துள்ளார். சுனில் கவாஸ்கரோ, டி வில்லியர்ஸ் ஏபிடி என்று செல்லமாக அழைக்கப்படுகிறார். ஆனால் கிரிக்கெட்டுக்கே அவர்தான் ஏபிசிடி எல்லாமுமே என்று தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் கோஹ்லியா, டிவில்லியர்சா என்ற விவாதம் கிரிக்கெட் ரசிகர்கள் நடுவே நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, May 25, 2016, 18:16 [IST]
Other articles published on May 25, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+