For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அடங்காப் "பசி"யில் கோஹ்லி.. கூடவே டிவில்லியர்ஸ்... அஸ்தமித்துப் போன சன் ரைசர்ஸ்!

பெங்களூரு: கேப்டன் விராத் கோஹ்லியும், ஏபி டிவில்லியர்ஸும் போட்ட போடில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் தனது முதல் போட்டியில் பரிதாபகரமான தோல்வியைத் தழுவ நேரிட்டது.

9வது ஐபிஎல் தொடரில், பெங்களூரில் நேற்று நடந்த தங்களது முதல் போட்டியில், ஹைதராபாதும், பெங்களூரும் மோதின. இதில் டிவி்ல்லியர்ஸ் வழக்கம் போல பிரித்து மேய்ந்து விட்டார். பற்றாக்குறைக்கு கோஹ்லியும் அதிரடிக்கு மாறியதால் பெங்களூர் அணி 20 ஓவர்களில் 227 ரன்களைக் குவித்து விட்டது.

இதை சேஸ் செய்ய வந்த ஹைதராபாத்தை மிக நேர்த்தியான பவுலிங் மற்றும் பீல்டிங் மூலம் பெங்களூர் அணி தடுத்து நிறுத்தியதால், 45 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

அபாரமான பார்ட்னர்ஷிப்

அபாரமான பார்ட்னர்ஷிப்

கோஹ்லியும், டிவில்லியர்ஸும் இணைந்து அபாரமான பார்ட்னர்ஷிப்பைக் கொடுத்தனர். இருவரும் 87 பந்துகளில் 157 ரன்களைக் குவித்து ஹைதாபாத் பவுலர்களுக்கு பெப்பே காட்டினர்.

"டபுள் தமாகா"

டிவில்லியர்ஸ் ஒரு பக்கம் 42 பந்துகளில் 82 ரன்களைக் குவித்தார். மறுபக்கம் கோஹ்லி 51 பந்துகளில் 75 ரன்களை விளாசினார். உலகின் இரு பெரும் ஜாம்பவான் பேட்ஸ்மேன்கள் அடித்து நொறுக்கி ஆடியது ரசிகர்களை குஷிப்படுத்தியது.

கலங்கடித்த வார்னர்

கலங்கடித்த வார்னர்

பின்னர் ஹைதராபாத் சேஸ் செய்ய வந்தபோது கேப்டன் டேவிட் வார்னர் அதிரடி காட்டிப் பார்த்தார். 25 பந்துகளில் 58 ரன்களை அவர் குவித்தார். இருப்பினும் பெங்களூரு பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டு ஹைதராபாத்தை 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்களோடு சுருக்கி விட்டனர்.

நல்லாத்தான் சேஸ் செய்தனர்

நல்லாத்தான் சேஸ் செய்தனர்

பெங்களூரு மாதிரியான பேட்டிங் பிட்ச்சுக்கு எந்தப் பெரிய டோட்டலும் பாதுகாப்பானது இல்லைதான். அதற்கேற்ப ஹைதராபாதும் கூட நன்றாகவே சேஸ் செய்து வந்தது. 8 ஓவர்களில் அவர்கள் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 83 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டம் உயிர்ப்போடுதான் இருந்தது.

வார்னர் போனதும்

வார்னர் போனதும்

ஆனால் வார்னர் அவுட்டானதும் சேஸிங் வேகம் குறைந்து விட்டது. அடுத்தடுத்து முக்கிய விக்கெட்களை ஹைதராபாத் இழக்க ஆரம்பித்தது. சூழலைப் பயன்படுத்திக் கொண்டு பெங்களூரு பவுலர்களும் விக்கெட்களை சாய்க்க ஆரம்பித்தனர்.

12வது ஓவரில் வந்த பரிதாபம்

12வது ஓவரில் வந்த பரிதாபம்

8வது ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 83 ரன்களில் இருந்த ஹைதராபாத், 12வது ஓவரின்போது 5 விக்கெட் இழப்புக்கு 101 என்ற பரிதாபமான நிலையில் இருந்தனர்.

பந்துக்கு 3 வேணும்யா

பந்துக்கு 3 வேணும்யா

ஒரு கட்டத்தில் ஒரு பந்துக்கு 3 ரன்கள் எடுத்தாக வேண்டிய நிலைக்கு ஹைதராபாத் தள்ளப்பட்டது. அந்த சமயத்தில் இயான் மோர்கன் (22 நாட் அவுட்), ஆசிஷ் ரெட்டி (32) சற்றே நிலைமையை சமாளிக்க முயன்று பார்த்தனர். ஆனால் முடியவில்லை.

நேஹ்ராவே பயந்துட்டாரே

நேஹ்ராவே பயந்துட்டாரே

முன்னதாக பெங்களூரு பேட்டிங்கின்போது ஹைதராபாத் பந்து வீச்சாளர் ஆசிஷ் நேஹ்ராவையே பிரித்து விட்டனர் கோஹ்லியும், டிவில்லியர்ஸும். வழக்கமாக சிக்கணமாகவே ரன்களை விட்டுக் கொடுப்பார் நேஹ்ரா. நேற்று அவருக்கே பெரும் சோதனையாகி விட்டது.

2.1 ஓவர்கள்.. 21 ரன்கள்

2.1 ஓவர்கள்.. 21 ரன்கள்

2.1 ஓவர்கள் போட்ட நேஹ்ரா 21 ரன்களை வாரிக் கொடுத்து ஹைதராபாத்தை தர்மசங்கடத்தில் ஆழ்த்தி விட்டார். அவரது பந்து வீச்சால் பெங்களூரைக் கட்டுப்படுத்த முடியாமல் போனது ஹைதராபாத்துக்கு சிக்கலை ஏற்படுத்தி விட்டது.

9 சிக்ஸர்கள்

9 சிக்ஸர்கள்

கோஹ்லியும், டிவில்லியர்ஸும் சேர்ந்து 9 சிக்ஸர்களை விளாசினர். இதில் டிவில்லியர்ஸ் 6 சிக்ஸர்களை அள்ளினார். கோஹ்லி பங்கு 3. இது போக கோஹ்லி 7 பவுண்டரிகளை அடித்தார். அதேபோல டிவில்லியர்ஸும் 7 பவுண்டரிகளை அடித்தார்.

அடங்கா ரன் பசியில் கோஹ்லி

அடங்கா ரன் பசியில் கோஹ்லி

டி20 உலகக் கோப்பைத் தொடரில் கோஹ்லி பிரமாதமாக ஆடி ரன்களைக் குவித்தார். அதே வேகத்தில் தொடர்ந்து அவர் ஆடுவது எதிரணிகளுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Wednesday, April 13, 2016, 12:15 [IST]
Other articles published on Apr 13, 2016
English summary
Virat Kohli and AB de Villiers shared a breathtaking 157-run stand off 87 balls as Royal Challengers Bangalore (RCB) secured a comfortable 45-run win over Sunrisers Hyderabad (SRH) in their opening match of the Indian Premier League 2016 (IPL 9) in Bengaluru on Tuesday night (April 12).
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+