Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பஞ்சாப் அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹாட்ரிக் வெற்றியை ருசித்தது

ஹைதராபாத்: ஐ.பி.எல். லீக் போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை ஹைதராபாத் சன்ரைசர்ஸ வீழ்த்தி வெற்றி பெற்றது.

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற 18-வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச முடிவு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு முரளி விஜய் (2), மனன் வோரா (25) ரன்னில் அவுட் ஆகி வெளியேறினர்.

பஞ்சாப் அணியின் சொதப்பலான ஆட்டத்தால் ரன் குவிக்க முடியவில்லை. அதிகபட்சமாக ஷான் மார்ஷ் 40 ரன்னும் அக்சர் பட்டேல் 36 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ரன் குவிக்க தவறியதால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்தது பஞ்சாப்.

இதனையடுத்து, 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணியில் வார்னரும், தவானும் களமிறங்கினர். வார்னர் இந்தப் போட்டியிலும் வழக்கம் போல் அதிரடியாக விளையாடினார். அவருக்கு துணையாக தவான் நிதானமாக ரன்களை சேர்த்தார். அதிரடியாக விளையாடிய வார்னர் 23 பந்துகளில் அரைசதம் விளாசினார்.

பின்னர், 31 பந்துகளில் 59 ரன்கள் குவித்த போது வார்னர் ஆட்டமிழந்தார். வார்னர் ஆட்டமிழந்த போது, ஹைதராபாத் அணி 9.5 ஓவர்களில் 90 ரன்கள் எடுத்திருந்தது. நிலைத்து நின்று விளையாடிய தவான் 44 பந்துகளில் 45 ரன்கள் எடுத்த போது ஆட்டமிழந்தார்.

இறுதியில் 17.5 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து வெற்றியை ஐதராபாத் அணி எட்டியது. பஞ்சாப் அணியை வீழ்த்தி ஹைதராபாத் அணி தொடர்ச்சியாக தனது ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது. 5 போட்டிகளில் விளையாடிய வார்னர் 294 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை தக்க வைத்துள்ளார். 9 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டை வீழ்த்திய முஸ்தபியர் ரஹ்மான் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

முதல் இரு ஆட்டங்களில் தோல்வி அடைந்த ஹைதராபாத் அணி, அதன் பிறகு மும்பையை 7 விக்கெட் வித்தியாசத்திலும், குஜராத்தை 10 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த வெற்றியின் மூலம் ஹைதராபாத் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது.

Story first published: Sunday, April 24, 2016, 0:50 [IST]
Other articles published on Apr 24, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+