Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிட்சில் தெளிக்க நீர் இல்லை.. ஐபிஎல் இறுதி போட்டி மும்பைக்கு பதில் பெங்களூருக்கு மாற்றம்

பெங்களூர்: நடப்பு, ஐபிஎல் சீசன் இறுதி போட்டியை மும்பைக்கு பதிலாக பெங்களூரில் நடத்த ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

வறட்சி காரணமாக மகாராஷ்டிரா மாநிலம் தத்தளிக்கும் நிலையில், ஐபிஎல் கிரிக்கெட்டுக்கான, பிட்ச் பராமரிப்புக்கு நீரை பயன்படுத்துவதை எதிர்த்து அம்மாநில ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

விசாரித்த நீதிமன்றம், ஏப்ரல் 30ம் தேதிக்கு பிறகு எந்த போட்டியையும் மும்பை, புனே மற்றும் நாக்பூர் ஆகிய மராட்டிய மாநிலத்திலுள்ள 3 ஸ்டேடியங்களில் எதிலுமே நடத்த கூடாது என உத்தரவிட்டது.

தேர்வு

தேர்வு

இதையடுத்து மும்பையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஐபிஎல் இறுதி போட்டி பெங்களூருக்கு மாற்றப்பட்டுள்ளது. புனே மற்றும் மும்பை அணிகள் மகாராஷ்டிராவை சேர்ந்தவை என்பதால், தங்களது ஹோம்-கிரவுண்டாக புனே, மும்பை நகரங்களை தவிர்த்து ராய்ப்பூர், ஜெய்ப்பூர், விசாகபட்டணம், கான்பூர் ஆகிய நகரங்களில் உள்ள மைதானங்களை தேர்வு செய்ய சாய்ஸ் தரப்பட்டது.

புனேவுக்கு விசாகபட்டணம்

புனேவுக்கு விசாகபட்டணம்

விசாகபட்டணத்தை தங்கள் சொந்த மைதானமாக ஏற்பதாக புனே கூறியுள்ளது. மும்பை அணி கால அவகாசம் கேட்டுள்ளது. இனிமேல் புனே அணி தனது ஹோம்-கிரவுண்டில் நடைபெறவிருந்த போட்டிகளை விசாகபட்டணத்தில் ஆடும்.

காலிறுதி

காலிறுதி

முதலாவது காலிறுதி பெங்களூரிலும், 2வது காலிறுதி கொல்கத்தாவிலும் நடைபெறும் என்றும் ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

புல்வெளிக்கு தண்ணீர்

புல்வெளிக்கு தண்ணீர்

இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் அனுராக் தாக்கூர் இதுகுறித்து அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளார். மாநிலத்திலுள்ள நீச்சல் குளங்களை எல்லாம் மூடிவிட்டார்களா, வீட்டிலுள்ள புல் தரைகளுக்கு நீர் ஊற்றுவது நிறுத்தப்பட்டுள்ளதா? ஏன் ஐபிஎல் போட்டிகளுக்கு மட்டும் கெடுபிடி என புரியவில்லை.

விமர்சன நோக்கம்

விமர்சன நோக்கம்

இந்த போட்டித்தொடர் மீதான விமர்சனம் வைக்கப்பட வேண்டும் என்பதே சிலருக்கு குறிக்கோளாக இருக்கிறது. இத்தனைக்கும் கழிவு நீரைத்தான் மைதான பராமரிப்புக்கு பயன்படுத்துகிறோம் என்று கூறியுள்ளார்.

Story first published: Saturday, April 16, 2016, 13:12 [IST]
Other articles published on Apr 16, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+