பிப்.6ல் ஐபிஎல் வீரர்கள் ஏலம்.. கொட்டிக் கிடக்கும் பணத்துடன் காத்துக் கிடக்கும் டெல்லி டேர்டெவில்ஸ்
மும்பை: பிப்ரவரி 6ம் தேதி ஐபிஎல் வீரர்களுக்கான ஏலம் நடைபெற உள்ள நிலையில், டெல்லி டேர்டெவில்ஸ் அணியிடம் அதிகபட்சமாக இன்னும் ரூ.36.85 கோடி பாக்கியுள்ளது. அந்த அணிக்காக யுவராஜ்சிங் ரூ.16 கோடிக்கு கடந்த ஆண்டு ஏலத்தில் வாங்கப்பட்டிருந்தார். அவரோடு சேர்த்து, 14 பேர் அந்த அணியிலுள்ளனர்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிகபட்சமாக 19 வீரர்கள் உள்ளனர். இதற்காக அந்த அணி, ரூ.51.595 கோடியை செலவிட்டுள்ளது. அனைத்து அணிகளுடனும் ஒப்பிட்டால், அதிகமாக செலவிட்ட அணி மும்பை இந்தியன்ஸ் ஆகும். எனவே 8 அணிகளிலேயே, குறைவான தொகையை இருப்பு வைத்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணிதான். அவர்களிடம் ரூ.14.405 கோடி மட்டுமே பாக்கியுள்ளது.

அடுத்த மாதம் ஏலம் நடைபெற உள்ள நிலையில், ஏப்ரல் 9ம் தேதி முதல் மே 29ம் தேதிவரை நடைபெற உள்ள நடப்பு ஐபிஎல் தொடரில் புதிய வீரர்கள் ஆடுவார்கள்.
Story first published: Monday, January 4, 2016, 17:18 [IST]
Other articles published on Jan 4, 2016


Click it and Unblock the Notifications