பிட்ச் கை விட்டுருச்சு மச்சி... புலம்பும் பெங்களூர் ராகுல்!
பெங்களூரு: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தோல்வி அடைய பிட்ச்தான் காரணம் என்று கூறியுள்ளார் பெங்களூர் அணிக்காக அதிரடியாக ஆடிய கே.எல்.ராகுல்.
நேற்று நடந்த போட்டியில் பெங்களூர் அணி நன்றாக விளாடியும் கூட, பின்னர் சேஸ் செய்த மும்பை இந்தியன்ஸ் மிகச் சிறப்பாக பேட் செய்து போட்டியை வென்று விட்டது.
குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கீரன் போலார்ட், ஜாஸ் பட்லர் ஆகியோர் அதிரடியாக ஆடி அணியை வெற்றிக்கு இட்டுச் சென்று விட்டனர்.

அரை சதம் போட்டும்
இப்போட்டியில் பெங்களூரு அணியின் ராகுல் அரை சதம் போட்டும் பிரயோஜனம் இல்லாமல் போய் விட்டது. போட்டி முடிவில் ராகுல் அளித்த பேட்டியிலிருந்து...

விக்கெட் சரியில்லை
கோஹ்லி, கெய்லை சீக்கிரமே இழந்ததால் எங்களது பேட்டிங் உத்தியை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. விக்கெட் ஸ்லோவாக இருந்தது. ஈசியாக ரன் எடுக்க முடியவில்லை. ஹிட் பண்ண முடியவில்லை.

பார்ட்னர்ஷிப்புக்கு முயன்றோம்
இதனால் நல்ல பார்ட்னர்ஷிப் அமைக்க முடிவு செய்தோம், அதற்கு முயறசித்தோம். அந்த சமயத்தில் துரதிர்ஷ்டவசமாக டிவில்லியர்ஸ் அவுட்டாகி விட்டார். இருப்பினும் 150 ரன்களைத் தாண்டியது திருப்தி கொடுத்தது.

மும்பைக்குக் கை கொடுத்த பிட்ச்
எங்களைத்தான் பிட்ச் கை விட்டது. மாறாக மும்பை இந்தியன்ஸ் பேட் செய்தபோது அவர்களுக்கு பிட்ச் சாதகமாக மாறியது. ஈஸியாக பேட் செய்ய முடிந்தது.

கெய்ல் பார்ம் என்னாச்சு
கெய்லுக்கு இப்போது பார்ம் இல்லாவிட்டாலும் கூட அவர் அடிக்க ஆரம்பித்து விட்டால் எந்த விக்கெட்டாக இருந்தாலும் சரி, எந்த மைதானமாக இருந்தாலும் சரி, தனி ஆளாக 250 ரன்களைக் குவிக்கக் கூடியவர். ஆனால் எல்லா நேரமும் அதேபோல ஆட முடியாதே என்றார் ராகுல்.


Click it and Unblock the Notifications