Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தண்ணீர் பஞ்சத்தால் ஜெய்ப்பூருக்கு 'வீட்டை மாற்றியது' மும்பை இந்தியன்ஸ்!

மும்பை: தண்ணீர் பஞ்சம் காரணமாக மகாராஷ்டிராவிலுள்ள மைதானங்களில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை தங்களது ஹோம்-கிரவுண்டாக தேர்ந்தெடுத்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.

வறட்சி காரணமாக மகாராஷ்டிரா மாநிலம் தத்தளிக்கும் நிலையில், ஐபிஎல் கிரிக்கெட்டுக்கான, பிட்ச் பராமரிப்புக்கு நீரை பயன்படுத்துவதை எதிர்த்து அம்மாநில ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

விசாரித்த நீதிமன்றம், ஏப்ரல் 30ம் தேதிக்கு பிறகு எந்த போட்டியையும் மும்பை, புனே மற்றும் நாக்பூர் ஆகிய மராட்டிய மாநிலத்திலுள்ள 3 ஸ்டேடியங்களில் எதிலுமே நடத்த கூடாது என உத்தரவிட்டது.

பெங்களூரில் பைனல்

பெங்களூரில் பைனல்

இதையடுத்து மும்பையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஐபிஎல் இறுதி போட்டி பெங்களூருக்கு மாற்றப்பட்டுள்ளது.

சாய்ஸ்

சாய்ஸ்

புனே மற்றும் மும்பை அணிகள் மகாராஷ்டிராவை சேர்ந்தவை என்பதால், தங்களது ஹோம்-கிரவுண்டாக புனே, மும்பை நகரங்களை தவிர்த்து ராய்ப்பூர், ஜெய்ப்பூர், விசாகபட்டணம், கான்பூர் ஆகிய நகரங்களில் உள்ள மைதானங்களை தேர்வு செய்ய சாய்ஸ் தரப்பட்டது.

புனேவுக்கு விசாகபட்டணம்

புனேவுக்கு விசாகபட்டணம்

விசாகபட்டணத்தை தங்கள் சொந்த மைதானமாக ஏற்பதாக புனே கூறியது. மும்பை அணி கால அவகாசம் கேட்டிருந்தது. இந்நிலையில், ஜெய்ப்பூரை தங்கள் ஹோம்-கிரவுண்டாக ஏற்க மும்பை இந்தியன்ஸ் முன் வந்துள்ளது.

காலிறுதி

காலிறுதி

எனவே, இவ்விரு அணிகளும், மும்பை, புனே மைதானங்களுக்கு பதிலாக, ஜெய்ப்பூர், விசாகபட்டணம் மைதானங்களில்தான் ஆடும். முதலாவது காலிறுதி பெங்களூரிலும், 2வது காலிறுதி கொல்கத்தாவிலும் நடைபெறும் என்றும் ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, April 18, 2016, 12:53 [IST]
Other articles published on Apr 18, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+