Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐ.பி.எல்.: டெல்லியை வீழ்த்திய பஞ்சாப் அணிக்கு 3வது வெற்றி !

மொகாலி: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி அணிக்கு எதிரான லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 36-வது லீக் ஆட்டத்தில் கொகாலியில் நடந்த நேற்றைய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின.

IPL 2016: Punjab stay alive with 9-run win over Delhi

டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்து வீச முடிவு செய்தது. முதலில் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது.

பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக ஸ்டோனிஸ் 52 ரன்களும், சாஹா 52 ரன்களும் எடுத்தனர். கேப்டன் முரளி விஜய் 25 ரன்கள் எடுத்தார். டெல்லி அணியில் மோரிஸ் 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

182 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. டி காக்கும், சாம்சனும் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். டி காக் 52 ரன்களும், சாம்சன் 49 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்தனர்.

பின்னர் வந்த வீரர்கள் ரன்குவிக்க தவறியதால், டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தனது 3-வது வெற்றியை பதிவு செய்தது.

Story first published: Sunday, May 8, 2016, 1:50 [IST]
Other articles published on May 8, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+