Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி வில்லியர்ஸ், கோஹ்லி அபாரம்: புனே அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெங்களூர்

புனே: ஐ.பி.எல். லீக் போட்டியில் கோஹ்லியன் பெங்களூர் அணி டோணியின் புனே அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

9-வது ஐபிஎல் கிரிக்கெட்டின் நேற்றைய 16-வது லீக் ஆட்டத்தில் டோணி தலைமையிலான ரைசிங் புனே சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி, விராட் கோஹ்லி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற டோணி பீல்டிங் தேர்வு செய்தார்.

IPL 2016: Virat Kohli, AB de Villiers put RCB back on winning track

கோஹ்லியும், ராகுலும் தொடக்க வீரர்களாக வீரர்களாகக் களமிறங்கினார்கள். ராகுல், பெரேரா பந்து வீச்சில் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனை அடுத்து கோஹ்லியுடன் டி வில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார். இருவரும் புனே பந்து வீச்சை நாலாபுறமும் பறக்கவிட்டனர். டி வில்லியர்ஸை அவுட் ஆக்க டோணி மேற்கொண்ட எல்லா சூத்திரங்களும் பலன் அளிக்காமல் போனது.

அதிரடியாக ஆடிய டி வில்லியர்ஸ் 25 பந்துகளில் அரைசதம் அடித்தார். விராட் கோஹ்லி 47 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார். இறுதியாக பெரேரா வீசிய 19வது ஓவரின் 3வது பந்தில் 80 ரன்கள் எடுத்திருந்த கோஹ்லி ஆட்டமிழந்தார். அடுத்த பந்திலேயே 83 ரன்கள் எடுத்திருந்த டி வில்லியர்சும் அவுட் ஆகி வெளியேறினார். இறுதியாக பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்களை இழந்து 185 ரன்கள் எடுத்தது. புனே தரப்பில் பெரேரா 3 விக்கெட்களை வீழ்த்தினார். 186 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் புனே அணி களமிறங்கியுள்ளது.

கடின இலக்கை விரட்டிய புனே அணிக்கு டு பிளசி (2) ரன்னில் வந்த வேகத்தில் அவுட் ஆகினார். பீட்டர்சன் (0) ரிட்டயர்டு ஹர்ட் முறையில் திரும்பினார். ஸ்டீவ் ஸ்மித் (4) ரன்கள் மட்டுமே எடுத்தார். ரகானே 60 ரன்கள் குவித்தார். டோணி (41), இதன் பிறகு பெரேரா, பாட்யா ஜோடி அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டது. பெரேரா 13 பந்துகளில் 34 ரன்கள் விளாசினார். பாட்யா 21 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் ரன்குவிக்க தவறியதால் புனே அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 172 ரன்கள் எடுத்து 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

Story first published: Saturday, April 23, 2016, 0:23 [IST]
Other articles published on Apr 23, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+