Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிளாசிக் கேட்ச், மின்னல் ஸ்டெம்பிங்.. ரசிகர்கள் இதயத்துடிப்பை எகிற வைத்த டோணி-வீடியோ

டெல்லி: டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் ரைசிங் புனே சூப்பர் ஜியான்ட்ஸ் அணி தோற்றிருக்கலாம். ஆனால் புனே அணியின் விக்கெட் கீப்பராக டோணி செய்த இரு அட்டாக்கிங் செயல்கள் ரசிகர்களை சீட்டில் கட்டிப்போட்டது.

ஐ.பி.எல். தொடரின் 52-வது லீக் ஆட்டம் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று இரவு 8 மணிக்கு நடைபெற்றது. புனே அணிக்கு எதிராக டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்ததது டெல்லி டேர்டெவில்ஸ்.

முதலில் பேட் செய்த அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கருண் நாயர் 45 பந்தில் 9 பவுண்டரியுடன் 64 ரன்களும், ரிஷப் பந்த் 22 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்ஸ் உடன் 36 ரன்களும் குவித்தனர்.

டெல்லி வெற்றி

டெல்லி வெற்றி

169 என்ற வெற்றி இலக்கை விரட்டிய புனே, 20 ஓவரில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் டெல்லி அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மனோஜ் திவாரி அதிகபட்சமாக 64 ரன்களை குவித்தார்.

டோணி பேட்டிங்

டோணி பேட்டிங்

இப்போட்டியில் முக்கியமான கட்டத்தில் களமிறங்கிய டோணி, கவனக்குறைவு காரணமாக 5 ரன்களில், ரன்அவுட்டாகி வெளியேறினார். பந்து வீச்சாளர் முனைக்கு ஓடிய டோணி, இந்த பக்கம் பந்தை ஃபீல்டர் எறியமாட்டார் என நினைத்து மெதுவாக ஓட்டத்தை தொடங்கினார். ஆனால் முகமது ஷமி, பந்தை எடுத்து அந்த பக்கமே வீச, டோணி ரன் அவுட்டானார்.

இரு வித்தைகள்

இரு வித்தைகள்

பேட்டிங்கில் ஏமாற்றினாலும், முன்னதாக ஃபீல்டிங்கில் எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார் டோணி. அதிலும் ஒரு கேட்ச் மற்றும் மின்னல் வேக ஸ்டெம்பிங் ஆகிய இரண்டும் ரசிகர்களை கொண்டாட செய்தன.

அருமையான கேட்ச்

27 ரன்கள் விளாசிய மார்லன் சாமுவேல்ஸ், கிறிஸ்டியன் வீசிய ஷார்ட் பிட்ச் பந்தை ஃபுல்ஷாட் அடிக்க முயன்றார். அப்போது அந்த பந்து பேட்டின் விளிம்பில் பட்டு பேட்ஸ்மேனின் பின்னால் எகிறியது. அந்த பந்து தனது தலைக்கு மேல் வரும்வரை காத்திருந்து சரியான நேரத்தில் பல அடி உயரம் துள்ளி அதை கேட்ச் செய்தார் டோணி. முன்கூட்டியே துள்ளியிருந்தால் அந்த பந்து கையில் கிடைத்திருக்காது. பொறுமையாக காத்திருந்து மீனை கவ்வும் கொக்கு போல செயல்பட்டார் டோணி.

மின்னல் வேகம்

இப்போது மின்னல்வேக ஸ்டெம்பிங். டோணி கீப்பிங் செய்யும்போது கிரீசை விட்டு வெளியே சென்ற பேட்ஸ்மேன், பந்தை மிஸ் செய்தால் பிறகு 3வது நடுவர் முடிவுக்கு காத்திருக்க தேவையில்லை என்பது கிரிக்கெட் உலக டாக். சிங்கத்தின் குகைக்குள் நுழைந்த ஒருவன் எப்படி பத்திரமாக திரும்ப முடியாதோ அதே நிலைதான், டோணியிடம் ஆட்டம் காட்டும்போதும். அந்த அளவு வேகமாக ஸ்டம்பிங் செய்துவிடுவார். வாஷிங்டன் சுந்தர் வீசிய பந்தை மிஸ் செய்த கோரி ஆன்டர்சன் நிலைமையும் நேற்று அப்படித்தான் ஆனது.

தலைசிறப்பு

தலைசிறப்பு

இவ்விரு விக்கெட் கீப்பிங் செயல்பாடுகளும், டோணி இன்னமும் உலகின் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர்தான் என்பதை பறைசாற்றிவிட்டதாக சிலாகிக்கிறார்கள் அவரது ரசிகர்கள். சமூக வலைத்தளங்களிலும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

Story first published: Saturday, May 13, 2017, 10:09 [IST]
Other articles published on May 13, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+