Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பவுலிங் மிஷினை வைத்து ஐபிஎல் நடத்தலாம்.. கடும் கோபத்தில் கரித்து கொட்டும் ஹர்பஜன்சிங்

மும்பை: பஞ்சாப்புக்கு எதிராக நைய புடைபட்ட ஹர்பஜன்சிங், தனது ஆத்திரத்தை சமூக வலைத்தளத்தில் கொட்டியுள்ளார்.

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு மும்பை-பஞ்சாப் அணிகள் மோதின. டாசில் வென்ற மும்பை கேப்டன் ரோகித் ஷர்மா ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்தார்.

முதலில் பேட் செய்த பஞ்சாப், அதிரடியாக ரன் குவித்தது. 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 230 ரன்களை அந்த அணி குவித்தது. அதிகபட்சமாக விருதிமான் சாஹா 93, மேக்ஸ்வெல் 47 ரன்கள் குவித்தனர்.

அபார சேஸிங்

அபார சேஸிங்

231 என்ற பெரிய இலக்கை விரட்டிய மும்பை, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 223 ரன்களை எடுத்தது. சிமென்ஸ் 59 ரன்கள் எடுத்த நிலையில், கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய பொல்லார்ட் 50 ரன்களுடன் களத்தில் நின்றார்.

ஹர்பஜனுக்கு கடும் அடி

ஹர்பஜனுக்கு கடும் அடி

இந்த வெற்றியால் பஞ்சாப் தனது பிளேஆப் சுற்று வாய்ப்பை உயிர்ப்போடு வைத்துள்ளது. அடுத்த போட்டியிலும் அந்த அணி வெல்ல வேண்டியது கட்டாயம். இப்போட்டியில் சீனியர் ஸ்பின்னர் ஹர்பஜன்சிங் பந்து தோலுரித்து தொங்கவிடப்பட்டது.

வாரி வழங்கிய பஜ்ஜி

வாரி வழங்கிய பஜ்ஜி

ஹர்பஜன்சிங் 3 ஓவர்கள் மட்டுமே வீசி 45 ரன்களை வாரி வழங்கினார். இதனால் கடும் கோபத்தில் உள்ளார் பஜ்ஜி. அஸ்வின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்துவதை பார்த்து, இந்திய பிட்சுகள் ஸ்பின்னுக்கு சாதகமாக மாற்றப்பட்டுள்ளது. இப்படி பிட்ச் இருந்தால் நான் மேலும் பல சாதனைகள் செய்திருப்பேன் என வயிற்றெரிச்சலை கொட்டிய ஹர்பஜன் இப்போது வேறு விதமாக ஒரு கருத்தை முன் வைத்துள்ளார்.

பவுலிங் மிஷின்

போட்டி முடிந்த பிறகு, டிவிட்டரில் அவர் கூறுகையில், ஆட்ட நாயகன் விருதை, வான்கடே ஸ்டேடியத்தின், பிட்ச் வடிவமைப்பாளருக்குத்தான் தர வேண்டும். ஆட்டத்தின் மொத்த 40 ஓவர்களில் இரு அணியுமாக 460 ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளது. பவுலர்களை தவிர்த்துவிட்டு வெறும், பவுலிங் மெஷின்களை வைத்து பந்து வீச வேண்டிய காலம் நெருங்கிவிட்டது என்று கூறியிருந்தார் ஹர்பஜன்சிங்.

மற்ற பவுலர்கள் சிறப்பு

மற்ற பவுலர்கள் சிறப்பு

ஆனால் நெட்டிசன்களோ ஹர்பஜனைதான் கேலி செய்கின்றனர். இதே பிட்சில்தான் பும்ரா 4 ஓவர்கள் வீசி 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்திரு்தார். அருமையான ஒரு பந்தில் மேக்ஸ்வெல் விக்கெட்டை அவர் வீழ்த்தியிருந்தார். பஞ்சாப் அணி ஸ்பின்னர் ராகுல் தேவாதியாவும் சிறப்பாக பந்து வீசினார். இதையெல்லாம் ஒப்பிட்டு, ஆடத்தெரியாதவர் தெரு கோணல் என கூறலாமா என ஹர்பஜனை கேலி செய்கிறார்கள் நெட்டிசன்கள்.

Story first published: Friday, May 12, 2017, 12:16 [IST]
Other articles published on May 12, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+