மூளையில்லாதவர் என்ற கமெண்ட்.. மஞ்சரேக்கரை தேடிப்போய் பதிலடி கொடுத்த பொலார்ட்
மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் கிரன் பொல்லார்டை மூளையற்றவர் என கமெண்ட் அடித்த சஞ்சய் மஞ்சரேக்கர் தற்போது நன்கு வாங்கிக் கட்டிக்கொண்டுள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி பெற்றது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மும்பை பேட்ஸ்மேன் பொலார்ட் ஒரு சிக்சருடன் 17 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
அவர் 6வது வீரராக களமிறங்கினார். ஆனால் அப்போது பந்துக்கும், ரன்னுக்குமான வித்தியாசம் மிக அதிகமாக இருந்தது.

வாய்க்கு வந்ததை பேசினார்
டிவி வர்ணனை செய்த சஞ்சய் மஞ்சரேக்கர் சும்மா இல்லாமல், "இப்போ போய் இவரு இறங்குகிறாரே, முன்கூட்டியே போயிருக்க வேண்டாமா.. மூளையிருக்கா இவருக்கு" என கமெண்ட் அடித்தார். போட்டி முடிந்த பிறகு, இந்த விஷயம் எப்படியோ பொலார்ட் காதுக்கு போய்விட்டது.
பேசத்தானே காசு கொடுக்கிறார்கள்
பரிசளிப்பு நிகழ்ச்சிகள் எல்லாம் முடிந்த பிறகு டிவிட்டரில் இதற்கு பதிலடி கொடுத்துள்ளார் பொலார்ட். நீங்கள் பேசத்தான் உங்களுக்கு பணம் கொடுக்கிறார்கள். நீங்கள் இப்படியே தொடர்ந்து பேசிக்கொள்ளலாம் என கூறியுள்ளார் பொலார்ட். மஞ்சரேக்கர் டிவிட்டர் கணக்கை தேடிப்போய் டேக் செய்து இப்படி பொலார்ட் கூறியுள்ளார்.

வார்த்தை முக்கியம்
இன்னொரு டிவிட்டில் வார்த்தை ஒருமுறை வெளியே வந்துவிட்டால் அதை திரும்ப பெறுவது கஷ்டம். எனவே சரியாக பேசுவது அவசியம் என்று அவர் கூறியுள்ளார். மஞ்சரேக்கர் இறுயாக டீம் முயற்சி வென்றுள்ளதாக கூறியுள்ளார். அது உண்மைதான், ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்ட இளைஞர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் எனவும் கூறியுள்ளார். பொலார்டுக்கு சக மே.இ.தீவுகள் வீரர் டினோ பெஸ்ட் டிவிட்டரில் ஆதரவு தெரிவித்துள்ளார்.

சர்ச்சை வீரர்
2015ல் நடந்த ஐபிஎல் தொடரில் வாய் பேச கூடாது என நடுவர்கள் கண்டித்ததால், வாயை சுற்றிலும் டேப் சுற்றிக்கொண்டு வந்து நின்று கவனம் ஈர்த்தவர் பொல்லார்ட் என்பது குறிப்பிடத்தக்கது. பொல்லார்ட் கருத்துக்களுக்கு, மஞ்சரேக்கர் இதுவரை பதில் அளிக்கவில்லை.


Click it and Unblock the Notifications