Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"கோச்" இவர்தான்.. .ஆனால் இவர் சொல்லப் போற "அட்வைஸ்" எதுவும் இவரோடது இல்லை!!

கொல்கத்தா: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்து வீச்சுப் பயிற்சியாளராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள லட்சுமிபதி பாலாஜி, பந்து வீச்சு ஜாம்பவான் வாசிம் அக்ரமிடம் ஆலோசனை கலந்து அதன் பிறகே பயிற்சி தரப் போவதாக கூறியுள்ளார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அதி தீவிர வேகப் பந்து வீச்சாளராக ஒரு காலத்தில் இருந்தவர் பாலாஜி. தற்போது அந்த அணியின் பயிற்சியாளராக மாறியிருக்கிறார்.

பயிற்சியாளராக மாறினாலும் கூட வாசிம் அக்ரமின் ஆலோசனையை தான் கேட்கப் போவதாக கூறியுள்ளார் பாலாஜி. வாசிம் அக்ரம்தான் கொல்கத்தா அணியின் முன்னாள் பந்து வீச்சுப் பயிற்சியாளர் என்பது நினைவிருக்கலாம். இதுதொடர்பாக பாலாஜி அளித்துள்ள பேட்டி:

நிறைய கற்றுள்ளேன்

நிறைய கற்றுள்ளேன்

வாசிம் அக்ரம் இந்த அணியின் பயிற்சியாளராக இருந்தவர் என்பது எனக்கு தெரியும். அவரிடம் நானே கூட பல டிப்ஸ்களையும், பயிற்சியையும் பெற்றவன்தான். எனவே இப்போதும் கூட அக்ரமின் ஆலோசனையைப் பெற நான் தவற மாட்டேன்.

அக்ரமின் பாணி

அக்ரமின் பாணி

அக்ரமின் பவுலிங் ஸ்டைல் உள்ளிட்ட பல விஷயங்களை நான் கொல்கத்தா அணியின் பந்து வீச்சாளர்களுக்கு சொல்லித் தருவேன். இளம் பந்து வீச்சாளர்களை மெருகேற்ற அது உதவியாக இருக்கும். தேவைப்படும் நேரத்தில் நான் அக்ரமை இதற்காக அணுகுவேன்.

ஆனா நம்பர் என் கிட்டே இல்லையே!

ஆனா நம்பர் என் கிட்டே இல்லையே!

ஆனால் தற்போது அக்ரமின் போன் நம்பர் என்னிடம் இல்லை. ஆனால் கண்டிப்பாக நம்பரை வாங்கி அவருடன் பேசுவேன். அவரது ஆலோசனையையும் கேட்பேன். அவர் எப்போதுமே ஒரு பாஸ் போலவோ அல்லது பயிற்சியாளர் போலவே நடந்து கொண்டதில்லை. நல்ல நண்பராகவே அவர் பழகுவார் என்றார் பாலாஜி.

7 வருடம்

7 வருடம்

அக்ரம், கொல்கத்தா அணியின் பந்து வீச்சுப் பயிற்சியாளராக 7 வருடம் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. கெளதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா அணி இந்த முறை பாலாஜியின் பந்து வீச்சு ஆலோசனையுடன் களம் காணப் போகிறது.

Story first published: Monday, April 3, 2017, 17:14 [IST]
Other articles published on Apr 3, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+